முரிக்கா பெருங்கோவில்
முரிக்கா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral Church of Saint Mary in Murcia; எசுப்பானியம்: Iglesia Catedral de Santa María en Murcia) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள முரிக்கா எனும் நகரத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதுவே முரிக்காத் திருச்சபையின் ஆசனப் பெருங்கோவில் ஆகும். 1394 ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாயின. இதன் கட்டுமானப்பணிகள்1467 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் முடிவடைந்திருக்கலாம். பத்தாம் அல்ஃபொன்சோ மன்னனது சடலம் இப்பெருங்கோவிலிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முரிக்கா பெருங்கோவில் Cathedral of Murcia Catedral de Murcia | |
---|---|
![]() முரிக்கா பெருங்கோவில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | முரிக்கா, எசுப்பானியா |
சமயம் | உரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் |
கட்டிடக்கலை வகை | தேவாலயம் |
அடித்தளமிட்டது | 1394 |
இது பல்வேறு கட்டிடக்கலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உட்பகுதி கோதிக்காகவும் முகப்பு பரோக் கட்டிடக்கலையாகவும் காணப்படுகிறது. இம்முகப்பு வலேன்சிய சிற்பி கற்றும் கட்டிடக்கலை வடிவமைப்பாளரான ஜேமி போர்ட் ஐ மெலியா (Jaume Bort i Meliá)
மணிக் கோபுரம்
இம்மணிக் கோபுரம் 1521 தொடக்கம் 1791 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இதன் உயரம் 90 மீற்றர்கள் (300 அடி) ஆகும். இதுவே எசுப்பானியாவிலேயே உயரமான மணிக்கூண்டு (campanile) ஆகும்.
வெளி இணைப்புக்கள்
- Merklin & Schütze pipe organ
- Interactive Tour
- The Cathedral and a Picture Gallery from the Murcia City Official Tourism Site.
- Photos
- (எசுப்பானியம்) Diocese of Cartagena