முய்ஃபாங்

முய்ஃபாங் (Hmuifang) இந்தியாவின் மிசோரம் மாநிலம் அய்சோலில் உள்ள ஒரு சுற்றுலா தலம் ஆகும். அய்சோலில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள இந்த மலைகள் 1619 மீட்டர் உயரத்தில் அமைந்தது மட்டுமில்லாமல், இனக்குழு தலைமையின் கீழ் இருந்தது போன்று இன்னமும் அதன் கன்னித் தன்மை மாறாமல் உள்ளது. லுங்லேய் செல்லும் வழியில் முய்ஃபாங் அமைந்துள்ளது.[1]

முய்ஃபாங்
Hmuifang
முய்ஃபாங் மலைப்பகுதி
உயர்ந்த இடம்
உயரம்1,619 m (5,312 ft)
இடவியல் முக்கியத்துவம்1,619 m (5,312 ft)
புவியியல்
அமைவிடம்அய்சால் மாவட்டம், மிசோரம், இந்தியா
மலைத்தொடர்உலுசாய் மலைகள்

வரலாறு

மலைகள் உள்ள கிராமங்களை ஆண்ட முன்னாள் குழு தலைவர் லல்லியான்வுங்காவின் விவசாய நிலத்தின் வலது பக்கத்தில் முய்ஃபாங் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.[2] துரியல் ஆறின் பிறப்பிடமாகவும் முய்ஃபாங் விளங்குகிறது.

தல்பாவாங் குட்

தல்பாவாங் குட் எனும் மிசோ திருவிழா ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையினரால் சுற்றுலாவை ஊக்குவிக்க முய்ஃபாங் கில் நடத்தபடுகிறது.[3] செரொ, செய்லம் மற்றும் செளலாகி போன்ற நடன வகைகள் பார்வையாளர்களுக்கு இத்திருவிழாவில் அரங்கேற்ற படுகின்றன[4][5].

மேற்கோள்கள்

  1. "Hmui".
  2. Patawrawt. "Hmuifang tlang ah lawn ru". misual.com. பார்த்த நாள் 24 August 2012.
  3. "V Purushothaman Keen to Build Mizoram Tourist Destination". Northeast Today. http://www.northeasttoday.in/our-states/mizoram/v-purushothaman-keen-to-build-mizoram-tourist-destination/. பார்த்த நாள்: 24 August 2012.
  4. "Thalfavang Kut hawn a ni". Ralvengtu. http://www.ralvengtu.com/news/north-east/624-thalfavang-kut-hawn-a-ni.html. பார்த்த நாள்: 24 August 2012.
  5. "GOVERNOR IN THALFAVANG KUT A HMANPUI". DIPR Mizoram. பார்த்த நாள் 24 August 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.