மும்முக கணபதி

மும்முக கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 28வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் மும்முக கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு

வலது கைகளில் கூரிய அங்குசம், அட்சமாலை, வரதம் இவற்றை உடையவர். இடது கைகளில் பாசம், அமுதகலசம், அபயம் இவற்றை உடையவர். பொற்றாமரையாசனத்தின் நடுப் பொகுட்டில் மூன்ற முகங்களோடு எழுந்தருளியிருப்பவர். புரசம், பூப் போன்ற சிவந்த நிறம் உடையவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.