முன்னொட்டு

[1]முன்னொட்டு ஒரு மொழியில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும் பொருள் நிறைந்தது. பொருள், இலக்கணப்பொருள்(Grammatical Meaning)

சொற்பொருள்(Lexical Meaning) என இரு வகைப்படும். ஒரே சொல்லில் இரு பொருளும் அமைந்திருப்பதையும் காணலாம். எடுத்துக்காட்டாக, மரத்தை  என்னும் சொல் மரம் என்பது சொற்பொருளையும், ஐ என்பது இலக்கணப்பொருளையும் கொண்டது.சொற்பொருள் அல்லது இலக்கணப்பொருள் நிறைந்த ஒரு மிகச்சிறிய கூறு உருபன் என்று சொல்லப்படுகிறது. மரத்தை என்னும் சொல்லில், மரம் என்பது, ஓர் உருபன். ஐ என்பது, ஓர் உருபன். முந்தியது ஒரு முழுமையான சொல், தனித்தியங்கவல்லது. பிந்தியது சொல்லின் பகுதியாக வருவது, தனித்து இயங்க இயலாதது.
  1. வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி பதினான்கு தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், சூலை 2008.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.