முந்நீர் விழா
முந்நீர் விழா என்பது சங்ககாலத்தில் நடைபெற்ற விழாக்களில் ஒன்று. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இந்த விழாவைக் கொண்டாடினான். அப்போது அவன் ‘செம்பொன்’ செல்வத்தை யாழிசைப் பாணர்களுக்கு வாரி வழங்கினான்.[1]
முந்நீர் விழாவைப் பற்றிப் பிற்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
- திருக்கோவையார் பழைய உரை [2] மேற்கண்ட பாடலை எடுத்துக்காட்டும் திருக்கோவையார் உரை முந்நீர்விழா கடல்தெய்வத்துக்கு எடுத்த விழா எனக் குறிப்பிட்டு முந்நீர் என்பது ஆற்றுநீர், ஊற்றுநீர், மேல்நீர் ஆகியவற்றைக் குறிக்கும் என விளக்குகிறது.
- நச்சினார்க்கினியர் 14 ஆம் நூற்றாண்டு மேற்காணும் உரையை எடுத்துக்காட்டி, முந்நீர் என்பது கடல். இது ஆகுபெயர். முந்நீர் என்பது ஆற்றுநீர், ஊற்றுநீர், மேல்நீர் ஆகியவற்றைக் குறிக்கும் என்பர். ஆற்றுநீர் மேல்நீர் ஆதலால் இது பொருந்தாது. முதிய நீர் என்பதும் பொருந்தாது. காரணம் முன்னைத் தோன்றிய கடல்நீரும் மேல்நீராகிய மழை இன்றேல் வளம் குன்றும். [3]
எனவே முந்நீர் என்பது மண்ணைப் படைத்தல், மண்ணின் வளம் காத்தல், மண்ணை அரித்து அழித்தல் ஆகிய மூன்று செய்கைகளை உடைய நீர் எனக் கொள்ளவேண்டும் [4] [5]
இவற்றையெல்லாம் கருதிப் பார்த்தால் மூன்றுநீர் என்பதை முன்னோர் கருதிப் பார்த்த அறிவியல் கண்ணோட்டம் விளங்குவதோடு, அவற்றையெல்லாம் எண்ணி முந்நீர்விழாக் கொண்டாடிய பாங்கையும் உணரமுடிகிறது.
- கரிகாலனின் முன்னோர் 'நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி'ய செய்தியோடு [6] இந்த முந்நீர் விழாவை நாவாய்த் திருவிழா எனக் கொள்வது பொருத்தமானது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
-
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! (புறநானூறு 9) - 12 ஆம் நூற்றாண்டு
-
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆய் விடின் (திருக்குறள் 17) - (1) சிலப்பதிகாரம் காதை 17-ல் பெரும்பாணாற்றுப்படை அடி 441 மேற்கோள் உரை
- (2) சீவகசிந்தாமணி உரை
- புறநானூறு 35
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.