முத்துப்பழனி

முத்துப்பழனி (1730 - 1790) தஞ்சை நாயக்க அரசரான பிரதாபசிம்மன் (ஆட்சிக்காலம் 1739-1763) என்பவரின் அரசவையில் இருந்த தெலுங்குப் பெண் கவிஞராவார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் தேவரடியார் மரபில் வந்தவர். தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர் சிறந்த நடனக் கலைஞருமாவார். இவரது புகழ்பெற்ற படைப்பு ராதிகா சாந்தவனம் என்பதாகும். இந்நூல் ஒரு பெண்ணின் (ராதை) பார்வையில் பாலியல் இச்சைகளையும், நுகர்வையும் வெளிப்படையாகப் பேசும் ஒரு செவ்விலக்கியமாகும். இயற்றப்பட்ட காலத்தில் முத்துப்பழனியின் குருவான வீரராகவ தேசிகராலும் பிற அவையினராலும் பாராட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1887ல் கீழைத்தேய வல்லுநர் சி.பி.பிரவுனின் கூட்டாளியும், மொழியியலாளருமான வேங்கடநரசுவால் முதன்முறையாக அச்சுக்கு வந்தது. பின்னர் 1910ல் பெங்களூர் நாகரத்தினம்மாவால் திருத்தப்பட்ட மறுபதிப்பு கண்டபோது ஒழுக்கவாதிகளால் ஆபாசப் பிரதியாக பார்க்கப்பட்டு தடைசெய்யப்பட்டது.பின்னர் இத்தடை 1947ல் விலக்கிக்கொள்ளப்பட்டது.[1][2][3]

குறிப்புதவி

  1. கவிதா முரளிதரன், "மீண்டும் மீண்டும் காதல்", தி இந்து (தமிழ்), ஜூன் 7, 2014, பார்த்த நாள் மார்ச் 26, 2015
  2. எஸ்.ராமகிருஷ்ணன், "ராதிகா சாந்தவனம்", பார்த்த நாள் மார்ச் 26, 2015
  3. சுசீ தாரு, கே.லலிதா, "Empire, Nation and the Literary Text", பார்த்த நாள் மார்ச் 26, 2015
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.