முசுகுந்த வேளாளர்

முசுகுந்த வேளாளர் சமூகத்தினை அறிந்து கொள்ள முதலில் பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட முசுகுந்த சோழனைப் பற்றித் தெரிந்து கொள்வது மிக அவசியமானது.

முசுகுந்த சோழனின் கதை

முசுகுந்த சோழன் சங்ககாலத்திற்கு முந்தைய சோழ அரசனாவான். இவனைப் பற்றிச் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் இவன் குரங்காகப் பிறந்தான். அப்பொழுது சிவனும் பார்வதியும் அமர்ந்த வில்வ மரத்தின் மீது ஏறி அதனை உலுக்கியதால், வில்வ இலைகள் இறைவன் மீதும் இறைவி மீதும் விழுந்தது. இதனால் மனம் குளிர்ந்த சிவன் மறுபிறவியில் நீ முசுகுந்த சோழன் எனும் அரசனாய்ப் பிறந்து உலகாள்வாய் என வரமளித்தார். அவனே முசுகுந்தன்.

சிறந்த சிவ பக்தன். அசுர தேவ போரில் தேவர்களுக்கு உதவி செய்து இந்திரன் பூசித்து வந்த ஏழு சிவலிங்கங்களையும் பூம்புகார்ப் பட்டினத்தைக் காவல் செய்யும் பூதத்தினையும் பெற்றான். வெள்ளிடைமன்றம்(திருட்டு வெளியாக்கும்), இலைஞ்சிமன்றம் (கூன், குறள், ஊமை, செவிடு, பெருவியாதி போக்கும்), நெடுங்கல்மன்றம் (நஞ்சருந்தல், பாம்பு கடித்தல், பேய் பிடித்தல் நீக்கும்), பூதசதுக்கம் (பொய்த்தவஞ் செய்வோர், பிறர் மனை நயப்போர், பொய்யுரைப்போர், புறங்கூறுவோர், தண்டனை அடையவும்), பாவைமன்றம் (அரசன் நீதிதவறினாலும், அரசனுக்குத் தீங்கு நேரிடுவதாயிருந்தாலும் பாவை நின்றலும்) என்னும் ஐவகை மன்றங்களையும் புகார்ப் பட்டினத்தில் தாபித்தவன்.

முசுகுந்த நாடு

முசுகுந்த சோழனால் நிர்மானிக்கப்பட்டு சைவவேளாளர்களிடம் கையளிக்கப்பட்ட நாடு முசுகுந்த நாடு.

தற்போதைய பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள 36 வெள்ளாள கிராமங்களும் அதனை சுற்றி உள்ள ஊர்களும் முசுகுந்த நாடு ஆகும். இதன் தலைநகரம் முசிரி ஆகும். இங்கு முசுகுந்த சோழனால் கட்டப்பட்ட சிவனாலயம் இன்றும் உள்ளது. இவ்வாலயம் முசிரி கைலாசநாதர் கோவில் என்று அழைக்கபடுகிறது. இங்கு உள்ள லிங்கம் இந்திரனிடம் இருந்து பெற்ற லிங்கம்.

முசுகுந்த வளநாடு தோன்ற காரணம்

ஒருமுறை முசுகுந்த சோழனுக்கு தீராத தோல் நோய் ஏற்பட்டது. நாட்டில் உள்ள மருத்துவர்கள் பலர் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனது. பிறகு, அமைச்சர்களின் ஆலோசனைப்படி பல புன்னிய தலங்களுக்கு சென்றான். அப்பொழுது, இராமேஷ்வரம் செல்ல தீரமாணித்து தற்போதைய முசுகுந்த வளநாடு வழியாக சென்றான். தற்போதைய முசுகுந்த நாடு பெரிய வனப்பகுதியாக இருந்தது. களைப்பினால் வீரர்களும் அரசனும் ஓய்வெடுத்தனர். அப்பொழுது , முசுகுந்தன் ஒரு காட்சியை கண்டான். " ஒரு தோல் நோய் கண்ட நாய் சேருநிறைந்த நீரில் நீராடி அதன் தோல் நோய் நீங்கி சென்றது" இதனை கண்ட முசுகுந்தன் அந்த சேற்றில் குளித்து தன்னுடைய நோய் நீங்கி சுகம் கண்டான். வீரர்களுக்கு நான் இராமேஷ்வரம் சென்று திரும்பி வருவதற்குள் இந்த இடத்தில் தீர்த்த குளம் உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு சென்றான்.

பிறகு, இராமேஷ்வரம் சென்று வந்து அங்கு இந்திரனிடம் இருந்து பெற்ற லிங்கத்தை நிருவி ஆலயம் எழுப்பினான்.

அந்த கோவிலையும் அந்த பகுதியினையும் நிர்வகிக்க புகார் நகர சைவ வேளாளர் குடும்பம் நான்கு பேரையும் வீரர்களையும் கொடுத்து தனி சோழவள நாடாக நிர்மாணித்தான்.

முசுகுந்த வளநாட்டு ஊர்களின் பெயர்கள்

முசிறி 32 கிராமங்கள் என்பது பழைய எண்ணிக்கையின் திரட்டு. தற்போது பிற்சேர்க்கையில் அது 36 ஆகவும் 40 ஆகவும் 42 ஆகவும் உயர்ந்ததாக கூற்று. இன்னும் சரி வர அனைத்து தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையாதலால் இங்கு பழைய கிராமங்களின் பெயர்கள் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளன .28.நெம்மேலி,அண்டமி,ஆத்திக்கோட்டை ,ஆலடிக்குமுளை ,ஆலத்தூர் ,ஆலம்பள்ளம் ,ஏனாதி ,கட்டயங்காடு,கருப்பூர் ,காசாங்காடு ,கீரத்தூர் ,கீழக்குறிச்சி ,சிலம்பவேளாங்காடு ,சுந்தம்பட்டி ,சூரங்காடு ,சூரப்பள்ளம் ,செங்கபடுத்தான்காடு ,செண்டாங்காடு ,செம்பாளூர் ,செவந்தன்பட்டி ,தாமரங்கோட்டை ,திட்டக்குடி,

நாட்டுச்சாலை ,பட்டிக்காடு ,பள்ளத்தூர் ,பழைய மதுக்கூர் ,பாளமுத்தி ,புதுக்கோட்டை உள்ளூர் ,புலவஞ்சி ,மட்டங்கால் ,மன்னங்காடு ,மூத்தாக்குறிச்சி ,வாட்டாகுடி ,விக்ரமம் வெண்டாக்கோட்டை மேலும் பட்டுக்கோட்டையின் புறநகர் பகுதிகளான லட்சத்தோப்பு மற்றும் சில பகுதிகளில் பெரிய அளவில் வாழ்கின்றனர்.

முசுகுந்த வளநாட்டு புகழ்மிக்க ஆலயங்கள்

முசிரி கைலாசநாதர் ஆலயம். ,தாமரங்கோட்டை கண்டேசுவரர் ஆலயம் ,மஞ்சவயல் முருகன் ஆலயம் ,தாமரங்கோட்டை தீக்குதித்த அம்பாள் ,தாமரங்கோட்டைட வீரனார் ஆலயம் ,வெண்டாக்கோட்டை முருகன் ஆலயம் ,ஆலத்தூர் வீரனார் ஆலயம் ,காசாங்காடு முத்துமாரி அம்மன் ஆலயம் ,கீழக்குறிச்சி சிவன் மற்றும் ஆனந்தவள்ளி ஆலயம் ,விக்ரமம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் ,சிலம்பவேளான்காடு முருகன் ஆலயம் ,மதுக்கூர் அருள் மிகு ஸ்ரீ பெரமையா கோயில் ,பட்டுக்கோட்டை நாடியம்மன் ஆலயம் ,பொது ஆவுடையார் ஆலயம்.

சுற்றுலா தலங்கள்

ஆலத்தூர் வீரனார் ஆலயம் ,முசிரி கைலாச நாதர் ஆலயம் , தாரங்கோட்டை கண்டேசுவரர் ஆலயம் ,மனோரா ,ஏரிப்புறகரை (கடற்கரை தாமரங்கோட்டை) ,தாமரங்கோட்டை அலையாத்தி காப்பு காடு(mutthupet reserved forest) ,மஞ்சவயல் முருகன் ஆலயம் ,ராஜாமடம் ,பூசாரிக்காடு வைரவர் கோவில் ,வௌவ்வாள் சரணாலயம்( பரக்கலகோட்டை) ,வலசை பறவைகள்(அமரிகுளம்)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.