முக்கூடற் பள்ளு
பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையில் சிறந்த நூல் முக்கூடற்பள்ளு. [1] நெல்லை மாவட்டத்தில் உள்ள பொருனை ஆற்றங்கரையில் முக்கூடல் என்ற நகரம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அழகர் பெருமானை இந்த நூல் போற்றி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் காலம் கி.பி. 1680 என குறிப்பிடப்படுகின்றது[2]. இதனை சொல் நயத்தோடும், ஓசை நயத்தோடும், சிலேடை நயத்தோடும் எழுதிய புலவன் யார் என்றே தெரியவில்லை.
நூல் அமைதி
குடும்பன் என்னும் பொதுப்பெயரால் குறிப்பிடப்படும் உழவன் இந்த நூலின் பாட்டுடைத் தலைவன். முக்கூடற் பள்ளியாகிய மூத்த பள்ளி குடும்பனின் முதல் மனைவி. மருதூர்ப் பள்ளியாகிய இளைய ப்பள்ளி குடும்பனின் இரண்டாவது மனைவி. இவர்கள் அழகர் கோயிலுக்கு உரிய பண்ணை நிலத்தைப் பயிரிட்டு வாழ்பவர்கள். பண்ணைக்காரன் என்பவர் கோயில் நிலத்தைக் கண்காணிக்கும் நிலக்கிழார்.
இவர்களின் உரையாடலாக இந்த நூல் நாடக வடிவத்தில் அமைந்துள்ளது.
இந்த நூல் உழவுத் தொழிலின் மேன்மையைப் புலப்படுத்தி அக்கால உழவுத் தொழிலை விளக்குகிறது. வித்து-வகை, மாடு-வகை, ஏர்-வகை முதலானவற்றைக் கூறும் பள்ளன் (உழவன்) அக்கால வேளாண்மை முறைமையைக் காட்டுகிறது.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- முக்கூடற் பள்ளு , பொருளுரை, விளக்கவுரையுடன், உரையாசிரியர் : ந. சேதுரகுநாதன், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், வெளியீடு, 1/140, பிரகாசம் சாலை, சென்னை-1, 1973
- https://nanjilnadan.com/2011/10/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/