முக்கார்பனேட்டு

முக்கார்பனேட்டு (Tricarbonate) என்பது கரிம வேதியியலில் ஈரிணைதிறன் [–O–(C=O)–O–(C=O)–O–(C=O)–O–] வேதி வினைக்குழுவைப் பெற்றுள்ள ஒரு சேர்மம் ஆகும். இதை டிரைகார்பனேட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். இச்சேர்மத்தில் மூன்று கார்பனேட்டு தொகுதிகள் ஒன்றன் பின் ஒன்றாய் வரிசையில் இரண்டு ஆக்சிசன் அணுக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இத்தகைய சேர்மங்களை கருத்தியல் டிரைகார்பானிக் அமிலத்தின் HO–(C=O)–O–(C=O)–O–(C=O)–OH. இரட்டை எசுத்தர்களாகக் கருதமுடியும். டை-டெர்ட்-பியூட்டைல் முக்கார்பனேட்டை இதற்கு ஒரு முக்கியமான உதாரணமாகக் கூறுவார்கள். இதுவொரு வேதியியல் வினையாக்கியாகும். பென்டேனில் இது கரையும். நிறமற்ற பட்டகச் சேர்மமான இது 62-63 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும் [1].

டிரைகார்பனேட்டு என்ற பெயர் சில சமயங்களில் மூன்று கார்பனெட்டு எதிர்மின் அயனிகளை விகிதவியல் வாய்ப்பாட்டில் பெற்றுள்ள சீரியம் டிரைகார்பனேட்டு Ce2(CO3)3 போன்ற சேர்மங்களையும் குறிக்கிறது.

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. Barry M. Pope, Yutaka Yamamoto, and D. Stanley Tarbell (1977), "Di-tert-Butyl Dicarbonate". Organic Syntheses, Vol. 57, p.45; Coll. Vol. 6 (1988) p.418
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.