முகம்மது நசீது
முகம்மது நசீது (Mohamed Nasheed, திவெயி: : މުހައްމަދު ނަޝީދު, பிறப்பு: 1967 மே 17), மாலைத்தீவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவரை அன்னி என அழைக்கும் மக்கள், அக்டோபர் 2008இல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைத் தந்து மாலைதீவுகளின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். முகம்மது நசீதுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களையும் காவற்றுறையினர் சிலரின் கிளர்ச்சிகளையும் அடுத்து 2012 பெப்பிரவரி 7 அன்று பதவி விலகினார்.
முகம்மது நசீது | |
---|---|
![]() | |
மாலைதீவின் முன்னாள் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 11 நவம்பர் 2008 – 7 பெப்ரவரி 2012 | |
முன்னவர் | மாமூன் அப்துல் கயூம் |
பின்வந்தவர் | முகம்மது வாகித் அசன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 17, 1967 மாலே, மாலைதீவு |
அரசியல் கட்சி | மாலைதீவு மக்களாட்சிக் கட்சி |
சமயம் | சுன்னி இசுலாம் |
சிறைத் தண்டனை
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் இந்தியாவிற்கு நெருக்கமானவருமான இவர் 2012ஆம் ஆண்டு அதிபராக இருந்தபோது தீவிரவாதச்செயல்களுக்கு சாதகமாக இருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு 2015 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர் 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்.[1]