முகமது வாகித் அசன்

முகமது வாகித் அசன் (Mohammed Waheed Hassan, திவெயி: ޑރ. މުހައްމަދު ވަހީދު ޙަސަން މަނިކު; பிறப்பு: 3 சனவரி 1953) மாலைதீவுகளின் அரசுத்தலைவரும், மாலைதீவுகள் தேசிய பாதுகாப்புப் படையின் முதற்பெரும் படைத் தலைவரும் ஆவார். 2012 பெப்ரவரி 7 ஆம் நாள் முகமது நசீது அரசுத்தலைவர் பதவியைத் துறந்ததை அடுத்து வாகித் அசன் புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்றார். 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் இவர் நாட்டின் பிரதி அரசுத்தலைவராக பதவியில் இருந்தார். யூனிசெப்பின் முதுநிலை உறுப்பினராகப் பதவியில் இருந்த வாகித் அசன் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.

முகமது வாகித் அசன்
Mohammed Waheed Hassan
ޑރ. މުހައްމަދު ވަހީދު ޙަސަން މަނިކު
மாலைதீவுகளின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 பெப்ரவரி 2012
முன்னவர் முகமது நசீது
மாலைதீவுகளின் பிரதித்தலைவர்
பதவியில்
11 நவம்பர் 2008  7 பெப்ரவரி 2012
குடியரசுத் தலைவர் முகமது நசீது
முன்னவர் இப்ராகிம் முகமது டீடி
பின்வந்தவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு 3 சனவரி 1953 (1953-01-03)
மாலே, மாலைதீவுகள்
அரசியல் கட்சி தேசிய ஒற்றுமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) இலாம் உசைன்
பிள்ளைகள் விதாத்
ஃபீதா
சலீம்
படித்த கல்வி நிறுவனங்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகம், பெய்ரூட்
இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம்
சமயம் இசுலாம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.