மீளுயிர்ப்புச் சுவாசம்

மீளுயிர்ப்புச் சுவாசம் அல்லது இதய நுரையீரல் செயல் தூண்டல் (Artificial respiration) என்பது சுயநினைவு அற்ற சுவாசம் இல்லாத ஒருவருக்கு வைத்தியசாலையிலோ, முதலுதவி வண்டியிலோ அல்லது முதலுதவியாளரால் சுயநினைவு வரும்வரை வழங்கப்படும் சுவாசம் ஆகும். இதயத்துடிப்பு நின்றுவிட்ட ஒருவருக்கு உடனடியாக மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் அழுத்திப் பிசைந்து, வாயின் மேல் வாய் வைத்துச் சுவாசத் தூண்டல் செய்யலாம். மூன்று, நான்கு நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத் தடை ஏற்பட்டால் மூளையில் நிலையான பாதிப்புகள் ஏற்படும். எனவே, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தினை விரைவில் நடைபெறச் செய்தல் தேவை. ஒருவருக்கு மரணம் என்பது மூளை இறப்பதனாலேயே ஏற்படுகின்றது. மூன்று நிமிடங்களுக்கு மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டால் மூளையில் உள்ள கலங்கள் இறக்க ஆரம்பிக்கும்.

செய்முறை

அழுத்துதல்

முதலில் நோயாளியிடம் ஆபத்தான பொருட்கள் ஏதும் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். எல்லாருக்குமோ நொடிக்கு (செக்கண்) ஒரு அமத்தலாக 30 இதய அமத்தல்களும் நொடிக்கு ஒரு வாய்ச்சுவாசமும் ஆக 2 வாய்ச்சுவாசமும் வழங்கப்படும். எனினும் 1வயது முதல் 7 வயது வரையிலான சிறுவர்களுக்கும் 1 வயது வரையிலான குழந்தைகளுக்கும் 5 வாய்ச்சுவாசம் கொடுத்தே மீளுயிர்ப்புச் சுவாசம் வழங்கப்படும். இதய அமத்தல் என்பது இதயத்தின் நடுப்பகுதியில் கொடுக்கப்படும் அமத்தலாகும். 7வயதிற்கு மேற்பட்ட வளர்ந்தவர்களுக்கு இரு கைகளாலும் 1 தொடக்கம் 7 வயதிலானவர்களுக்கு ஒருகையாலும் 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரண்டு விரலாலும் (சுட்டுவிரல் அல்லது ஆள்காட்டி விரலும் நடுவிரலும்) இதய அழுத்தல் மேற்கொள்ளப்படும். சுவாசம் திரும்பும் பொழுது வளர்ந்தவர்களாயில் ஓர் இருமலுடனோ அல்லது குழந்தைகளாயின் அழுவதுடனேயோ ஆரம்பிக்கலாம். எப்பொழுதுமே மீளுயிர்ப்புச் சுவாசம் வழங்கும் பொழுது நோயாளிக்கு சுவாசம் திரும்புகின்றதா என்பதை அவதானித்தல் வேண்டும்

வாய்ச்சுவாசம்

நாம் சுவாசத்தில் உள்ளெடுக்கும் வளியில் ஏறத்தாழ 4% ஒட்சிசனை மாத்திரமே பயன்படுத்துகின்றோம் எனவே வாய்ச்சுவாசம் வழங்கும் பொழுது அதிகம் யோசிக்காமல் வாய்ச்சுவாசம் வழங்க வேண்டும்.

வெளி இணைப்பு :

http://en.wikipedia.org/wiki/Rescue_breathing

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.