மீனாம்பாள் சிவராஜ்

மீனாம்பாள் சிவராஜ் (அன்னை மீனாம்பாள் சிவராஜ்) 26 டிசம்பர், 1904 - 30 நவம்பர், 1992 பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைபெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர்[1]

அன்னை மீனாம்பாள்

குடும்பவிபரம்

இவர் பறையர் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர்.[2] இவர் தனது 16வது வயதில் 1918இல் பட்டியலின இயக்கத் தலைவர் ந. சிவராஜ் என்பவரை மணந்து கொண்டார்.

பொறுப்புகளும் பணிகளும்

  • கவுன்சிலர் (6 ஆண்டுகள்)
  • கௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)
  • திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
  • சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
  • தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
  • சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)
  • போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
  • S.P.C.A உறுப்பினர்
  • நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
  • தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
  • அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
  • சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
  • விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
  • காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
  • மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
  • சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
  • லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்

குறிப்புகள்

  1. சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக் 95
  2. சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக்93

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.