மீனாட்சி நாராயணன்
மீனாட்சி நாராயணன் அல்லது மீனாம்பாள் என்பவர் இந்திய திரைப்பட உலகின் முதல் ஒலிப்பதிவாளராவார்.[1] இவரின் கணவர் ஏ. நாராயணன் தென்னியந்தியத் திரை உலகின் முன்னோடிகளில் ஒருவராவார். மீனாட்சி 1930-களில் ஒலிப்பதிவுக் கலைஞராக செயல்பட்டார். ஜெனரல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் இருந்த ஜெர்மன் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் அவர் பயிற்சிபெற்றார். அந்தக் காலத்தில் படப்பிடிப்புத் தளத்திலேயே ஒலிப்பதிவை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்படத்தக்கது. நாராயணன் இயக்கிய சீனிவாச கல்யாணம், ஸ்ரீ ராமானுஜர் உட்பட ஐந்து பேசும் படங்களுக்கு மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்தார்.[2]
மேற்கோள்
- "இப்படித்தான் வளர்ந்தது தமிழ் சினிமா.. இதோ சில 'முதல்கள்'! Read more at: https://tamil.filmibeat.com/news/firsts-tamil-cinema-035334.html". கட்டுரை. https://tamil.filmibeat.com.+பார்த்த நாள் 31 ஆகத்து 2017.
- "சினிமாவின் கோட்டையாகச் சென்னையை மாற்றியவர்!". கட்டுரை. தி இந்து (2016 திசம்பர் 23). பார்த்த நாள் 13 சனவரி 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.