மீ உயர் அதிர்வெண்
மீ உயர் அதிர்வெண் அலைகள் (Ultra-high frequency, UHF) என்பது பன்னாட்டுத் தொலைதொடர்பு ஒன்றியத்தால் வரையறுக்கப்பட்ட வானலை அதிர்வெண் கற்றைகளில் 300 மெகா ஏர்ட்சு முதல் 3 கிகா ஏர்ட்சு (3000 மெகா ஏர்ட்சு) வரையுள்ள அதிர்வெண் கற்றையைக் குறிப்பதாகும். இவற்றின் அலை நீளம் ஒன்று முதல் பத்து டெசிமீட்டர் வரை (10 செமீ முதல் ஒரு மீட்டர்) இருப்பதால் இந்த அலைக்கற்றை டெசிமீட்டர் கற்றை அல்லது டெசிமீட்டர் அலை எனவும் குறிப்பிடப்படுகின்றன. இதற்கு மேல் அதிர்வெண் உள்ள அலைகள் மைக்ரோவேவ் அலைக்கற்றையில் அமைகின்றன. மீ உயர் அதிர்வெண் அலைகள் காட்சிக் கோட்டில் பயணிக்கின்றன; குறுக்கிலுள்ள மலைகள், பெரிய கட்டிடங்கள் ஆகியவற்றால் தடுக்கப்படுகின்றன. இருப்பினும் கட்டிடங்களின் சுவர்களை கடந்து உட்புறத்திலும் பெறக்கூடியவையாக உள்ளன. இந்த அலைக்கற்றை தொலைக்காட்சி பரப்புகை, கொடியிலாத் தொலைபேசிகள், வாக்கி-டாக்கிகள், செய்மதித் தொலைதொடர்பு மற்றும் பல்வேறு செயல்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
மீ உயர் அதிர்வெண் (UHF) |
---|
அதிர்வெண் (சுற்றுகள்/செக்): 300 MHz இலிருந்து 3000 MHz வரை |
வெளி இணைப்புகள்
- U.S. cable television channel frequencies
- TVTower.com – Commercial Television Frequencies
- Tomislav Stimac, "Definition of frequency bands (VLF, ELF... etc.)". IK1QFK Home Page (vlf.it).