மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
ஆரம்பம்
விந்தன் அவர்கள் தினமணிக் கதிரில் தொடராக எழுதியவையே மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகளாகும். இக்கதைகளை ஆசிரியர் திரு.சாவி அவர்களின் தூண்டுதலின் பேரில் 'பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்' என்பதை முன்வைத்து தற்காலத்திற்கு தகுந்தாற்போல நவீனமாகவும் நகைச்சுவையுடனும் விந்தன் எழுதிள்ளார்.
கதைச்சுருக்கம்
சென்னை மௌண்ட் ரோட்டில் `ஒன் டூ த்ரீ' என்ற ஏலக்கம்பெனி 'குஷன் நாற்காலி'ஒன்றை ஏலம் விடுகிறது. அதனை அசட்டுத்தனமாக சந்திரவர்ணர் என்பவர் ஏலம் கூறிப் பெற்றுக் கொள்கிறார். சந்திரவர்ணரைக் கவனிக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் அவரை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்கிறார். அத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகை சாமுத்திரிகா லட்சணிக்கும் சந்திரவர்ணரும் காதல் திருமணம் செய்கின்றனர்.சந்திரவர்ணன் மனைவியரை வெறுத்து இறந்து விடுகிறார். அவரது மறைவிற்குப் பின், வெளிநாடுகளுக்கு படிக்க மகனான வவிக்கிரமாதித்தன் திரும்பி வருகிறார். தானும் விக்கிரமாதித்த ராஜா போல் பெயர்பெற வேண்டும் என விரும்புகிறார். சென்னை மவுண்ட்ரோடில் 32 மாடிக் கட்டிடத்தில் 'விக்கிரமாதித்தன் வென்சர்ஸ்' எனக் கம்பெனி ஆரம்பிக்கிறார்.தமது 32வது அறையில்,அவரது தந்தை சந்திரவர்ணர் ஏலத்தில் பெற்ற 'குஷன் நாற்காலி'யில் அமர்ந்து தமது தம்பி சிட்டி என்கின்ற சிட்டிபாபுவுடன் நிர்வாகம் செய்கிறார். இந்நிலையில்,பாதாளசாமி என்பவனை தமது வாகன ஓட்டுநராக பணியில் அமர்த்திக் கொள்கிறார். அவரை வியாபார நிமித்தமாக சந்திக்க போஜன் மற்றும் நீதிதேவன் ஆகியோர் வருகின்றனர்.மிஸ்டர் விக்கிரமாதித்தனை சந்திக்கும் முன் அவர்களுக்கு 32மாடிகளின் 32வரவேற்பாளினிகளும் மிஸ்டர் விக்கிரமாதித்தனின் பெருமைகளை கதைகளாக 32 நாட்களும் கூறுகின்றனர். அக்கதைகளுக்குப் பின்னர் போஜனும் நீதிதேவனும் மிஸ்டர் விக்கிரமாதித்தனை சந்தித்து தாங்கள் வந்த நோக்கத்தை தெரிவிக்கின்றனர்.
வரவேற்பாளினிகள்
1.ரஞ்சிதம் 2.மதனா 3.கோமளம் 4.கல்யாணி 5.மனோன்மணி 6.மோகனா 7.எழிலரசி 8.சௌந்தரா 9.நவரத்தினா 10.கனகதாரா 11.வித்தியா 12.சாந்தா 13சூர்யா 14.பூரணி 15.அமிர்தா 16.கிருபா 17.கருணா 18.பரிமளா 19.சற்குணா 20.சுந்தரா 21.இந்திரா 22.பங்கஜா 23.அபரஞ்சி 24.மனோரஞ்சிதம் 25.காந்தா 26.கலா 27.மாலா 28.ஷீலா 29.நர்மதா 30.முல்லை 31.நிர்மலா 32.நித்தியகல்யாணி
உசாத்துணை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்- முதற்பதிப்பு 2000- அருந்ததி நிலையம்,சென்னை-