மில்மா
மில்மா என்பது இந்திய மாநிலமான கேரளாவில் திருவனந்தபுரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் கேரள மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் என்ற தன்னாட்சி பெற்ற பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
![]() | |
வகை | கூட்டுறவு |
---|---|
நிறுவுகை | 1980 |
தலைமையகம் | திருவனந்தபுரம்,கேரளா, இந்தியா |
தொழில்துறை | Dairy |
உற்பத்திகள் | பால் பொருட்கள் மற்றும் மாட்டுத்தீவனம் |
வருமானம் | ▲ரூ 705.95 இலட்சம் (2005-06) |
பணியாளர் | 32,000 |
இணையத்தளம் | www.milma.com |
வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது.
வரலாறு
கடந்த 1963ஆம் ஆண்டு, இந்திய சுவிட்சர்லாந்து நாடுகளின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கேரளாவில் கறவை மாடுகள் வளர்ப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் ஸ்விஸ் பிரவுன் எனப்படும் கலப்பின மாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்பொழுது இத்திட்டம் கேரளா கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை வாரியம் என்ற அமைப்பின்கீழ் தொடர்கிறது.
அமுல் அமைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு செயல்படுத்திய இந்திய வெண்மைப் புரட்சித் திட்டத்தின்கீழ், மில்மா எனப்படும் கேரள மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு 1980ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 83 சதவீதத்துக்கும் மேலான கறவை மாடுகள் சுனந்தினி எனப்படும் கலப்பின பசுக்களாக மாற்றப்பட்டு, மாநிலத்தின் பால் உற்பத்தி பத்து மடங்காக உயர்த்தப்பட்டது.