மிர் ஆலம் டேங்க் (ஏரி)

மீர் ஆலம் டேங்க் ஏரி இந்தியாவின்[1] தெலுங்கானா[2] மாகாணத்தில் உள்ள ஐதராபாத்து[3] நகரத்தில் முசி ஆறு தென்புறத்தில் அமையப்பெற்றுள்ளது. இது ஐதராபாத்தின் முதன்மை குடிநீர் ஆதாரமாக ஓசுமான்[4] சாகர் ஏரியும் மற்றும் இமாயத் சாகர்[5] ஏரியும் உருவாகும் முன் இருந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை ஏழுடன் இணைக்கப்பட்டு உள்ளங்கை பள்ளத்தாக்கிற்கு அருகில் அமைந்துள்ளது.

மீர் ஆலம் டேங்க் ஏரி Mir Alam Tank
அமைவிடம்ஐதராபாத்து, தெலுங்கானா
ஆள்கூறுகள்17°21′N 78°26′E
வகைபாதுகாக்க்ப்பட்டது
முதன்மை வரத்துமுசி ஆறு Musi
முதன்மை வெளிப்போக்குமுசி ஆறு Musi
வடிநில நாடுகள்இந்தியா India
Surface area600 ஏக்கர்கள் (240 ha)
Islands2
Settlementsஐதராபாத்து

வரலாறு

இந்த ஏரிக்கு மீர் ஆலம் பகதூருக்கு பிறகுஐதராபாத்தின் நிசாம்[6] மூன்றாம் ஆசப் ஜா இதற்கு பெயரிட்டார். மீர் ஆலம் இந்த ஏரிக்கான அஸ்திவாரத்தை சூலை 20 1804- ஆம் ஆண்டு துவங்கியுள்ளார். ஆனால் அதன் பின் இரண்டு ஆண்டின் முடிவில் சூன்8 1806 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

நேரு உயிரியல் பூங்காவிற்கு மிக அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது. தெலுங்கானாவின் சுற்றுலா வாரியம் இதனை இயக்குகிறது. இந்த ஏரியில் படகு சவாரிகள் உயிரியல் பூங்காவின் வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. தெலுங்கானா மாநில அரசால் முன்மொழியப்பட்டு முன்னேற்றம் பெற்று வரும் எச்.எம்.டி.ஏ பூங்கா இந்கு அமைந்துள்ளது.

போக்குவரத்து

இந்த ஏரிக்கு பேருந்து சேவைகள் ராஜேந்திராநகர் பேருந்து பணிமனை, ஃபலக்னுமா பேருந்து பணிமனைகளில் இருந்தும் வழித்தட எண்7,49 போன்ற பேருந்துகளும் சிக்கந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. 94,95 கோதி74,73,251 எண் பேருந்துகள் அப்சல் குஞ்சில் இருந்தும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் இயக்கப்படுகிறது. அருகில் புட்வேல் மாநகராட்சி ரயில் நிலையம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. இந்தியா
  2. தெலுங்கானா
  3. ஐதராபாத்து (இந்தியா)
  4. ஓசுமான் சாகர் ஏரி
  5. https://en.wikipedia.org/wiki/Himayat_Sagar
  6. ஐதராபாத் நிசாம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.