மிருணாள் கோரே

மிருணாள் கோரே (Mrinal Gore, சுமார்.1928 17 சூலை 2012, வாசை) இந்தியாவைச் சேர்ந்த ஓர் சோசலிச அரசியல்வாதி ஆவார். இவர் ஜனதா கட்சியின் ஒரு தலைவராகவும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.தனது 83வது அகவையில் சூலை 17, 2012 அன்று மறைந்த இவரது அரசியல் சேவையை பலரும் பாராட்டியுள்ளனர்.[1]

மும்பையின் வடக்கு சுற்றுப்புறப் பகுதியான கோரேகானுக்கு குடிநீர் வழங்கல் அமைந்திட எடுத்த முயற்சிகளுக்காக இவர் பானிவாலி பாய் என்று அறியப்படுகிறார். இளமைப் பருவத்திலேயே மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தால் கவரப்பட்ட மிருணாள் மருத்துவப் பணிவாழ்வை துறந்து ஏழை மக்களின் நலனுக்காகப் போராடியுள்ளார்[2]. பெண்கள் உரிமைகள், குடி உரிமைகள், சமய நல்லிணக்கம், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். மகாராட்டிர சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராகவும் 1977ஆம் ஆண்டில் அமைந்த ஆறாவது மக்களவையில் வடக்கு மும்பை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். 1977இல் அமைந்த அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் பதவிக்கான வாய்ப்பை மறுத்துள்ளார்.

மிருணாள் கோரேயின் மனைவியின் பெயர் கேசவ் கோரே. இவர்களுக்கு அஞ்சலி வர்தக் என்ற மகள் உள்ளார்.[3]

மேற்கோள்கள்

  1. "PM condoles Gore's death". The Business Standard. பார்த்த நாள் July 17, 2012.
  2. "Veteran socialist Mrinal Gore, the 'Paniwali Bai' passes away". டி.என்.ஏ செய்தித்தாள். பார்த்த நாள் சூலை 19, 2012.
  3. "Veteran social activist Mrinal Gore passes away". The Hindu. பார்த்த நாள் July 18, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.