மிராஜ் 2000
டஸால்ட் மிராஜ் 2000 என்பது பிரான்ஸ் நாட்டு சண்டை வானூர்தியாகும். இது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஸன் நிறுவனத் தயாரிப்பாகும். இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ஆம் தலைமுறைப் போர் விமானம் ஆகும். இது பளு குறைந்த விமானமாக, மிராஜ் 3 எனும் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை விமானங்கள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராஜ் 2000என், மிராஜ் 2000 டி போன்ற தாக்குதல் விமானங்களும், மிராஜ் 2000-5 என்ற மேம்படுத்தப்பட்ட விமானங்களும், மேலும் பல்வேறு வகையான விமானங்களும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்படி சுமார் 600 க்கும் மேற்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டு ஒன்பது நாடுகளில் சேவையில் உள்ளது

2013-ஆம் ஆண்டுக் கணக்கின்படி மிராஜ் 2000-ஐப் பயன்படுத்தும் நாடுகள்
மிராஜ் 2000 (Mirage 2000) | |
---|---|
![]() | |
பிரெஞ்சு விமானப் படையின் மிராஜ் 2000C ஒன்று. |
டஸால்ட் மிராஜ் 2000 | |
---|---|
வகை | பல்வகை தாக்குதல் வானூர்தி |
உற்பத்தியாளர் | டஸால்ட் ஏவியேஸன் |
வடிவமைப்பாளர் | டஸால்ட் ஏவியேஸன் |
முதல் பயணம் | 10 மார்ச் 1978 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
பயன்பாட்டாளர்கள் | பிரான்ஸ் வான்படை, இந்திய வான்படை, ஐக்கிய அரபு எமிரேட் வான்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 600+ |
அலகு செலவு | US$23 மில்லியன் |
முன்னோடி | டஸால்ட் மிராஜ் III |
Variants | மிராஜ் 2000என், மிராஜ் 2000 டி, மிராஜ் 2000-5 |
வெளியிணைப்புகள்
- பொதுவான தகவல்கள்
- Dassault Aviation Mirage 2000 page
- Mirage 2000 page Globalsecurity.org
- Mirage 2000 page on Airforce-technology.com
- Mirage 2000 page on FAS.org
- Mirage 2000 and 4000 page on wingweb.co.uk
- IAF Mirages
- செய்திகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.