மியான்மர் பொதுத் தேர்தல், 2015

மியான்மர் பொதுத் தேர்தல் நவம்பர் 8, 2015 அன்று நடைபெற்றது.[1][2] ஒன்றிய சட்டப்பேரவையின் மேலவை ( தேசியங்களின் மன்றம்) மற்றும் கீழவையில் (சார்பார்களின் மன்றம்) படைத்துறையால் நியமிக்கப்பட்ட இடங்களைத் தவிர ஏனைய இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மியான்மர் பொதுத் தேர்தல், 2015

8 நவம்பர் 2015[1]
 
தலைவர் ஆங் சான் சூச்சி தெய்ன் செய்ன்
கட்சி சனநாயகத்திற்கான தேசிய கூட்டிணைவு ஒன்றிய கூட்டொருமை மற்றும் வளர்ச்சிக் கட்சி
தலைவராக 27 செப்டம்பர் 1988 2 சூன் 2010

முந்தைய அரசுத் தலைவர்

தெய்ன் செய்ன்
ஒன்றிய கூட்டொருமை மற்றும் வளர்ச்சிக் கட்சி

அரசுத் தலைவர் - தேர்வு

தீர்மானிக்கப்பட வேண்டும்
சனநாயகத்திற்கான தேசிய கூட்டிணைவு

1990இல் சனநாயகத்திற்கான தேசியக் கட்சி வெற்றிபெற்ற நிலையில் படைத்துறையால் இரத்தாக்கப்பட்ட மியான்மர் பொதுத் தேர்தலுக்குப் பிறகு திறந்தநிலையில் போட்டியிடப்பட்ட முதல் பொதுத் தேர்தல் இதுவாக இருந்தது.

இந்தத் தேர்தலில் சனநாயகத்திற்கான தேசியக் கட்சி (ச.தே.க) ஈரவைகளும் இணைந்த நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற்ற நிலையில் அரசுத் தலைவரையும் முதல் துணை அரசுத் தலைவரையும் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளது. தவிரவும் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது. தடங்கலில்லா சட்டவாக்கலுக்கு இது வழி வகுக்கும். ச.தே.க தலைவர் ஆங் சான் சூச்சி (அவர்தம் கணவரும் மக்களும் வேறுநாட்டவர் என்ற காரணத்தால்) அரசியல் சட்டப்படி இப்பொறுப்பை ஏற்கவியலாத நிலையில் எந்தவொரு ச.தே.க ஆட்சி அமைந்தாலும் அதன் உண்மையான அதிகாரம் தம்மிடம்தான் இருக்கும் என அறிவித்துள்ளார்.[3]

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.