மின்ஸ்க்

மின்ஸ்க் (Minsk, (ரஷ்ய மொழி: Мінск, மின்ஸ்க், பெலருஸ் நாட்டின் தலைநகரமாகும்.

பிரெஸ்ற், குரெட்னோ, கோமெல், மொகிலெவ், விற்றெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள்

பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. இறுதியில் பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது. 1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். பெலாரஸ் தற்போது அயல்நாடான ரஷ்யாவுடன் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus)என்னும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இத்திட்டத்தில் இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும். இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்ணோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.