மின்சார இயக்கி
மின்சார இயக்கி (Electric Motor) அல்லது மின் சுழற்பொறி என்பது மின்காந்த ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் ஒரு இயக்கி ஆகும் .

மின்சார இயக்கி
மின்காந்தப் புலம், மின்னோட்டம், இயந்திர அசைவு ஆகியவற்றுக்கு செங்கோணத் தொடர்பு உண்டு. அதாவது, மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஒரு மின்காந்தப் புலத்தில், மின் கடத்தி (அல்லது கம்பம்) ஒன்றை மேலே இருந்து கீழே அசைத்தால் அக் கடத்தியின் ஊடாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மின்னோட்டம் இருக்கும். அக் கம்பத்தை மேலே அசைத்தால் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மின்னோட்டம் இருக்கும். இந்த அடிப்படை குறிப்பு மின்சார இயக்கிகளை விளங்குவதற்கு முக்கியம்.
மின்சார இயக்கியின் குறுக்கு வெட்டு தோற்றம்
நுட்பியல் சொற்கள்
- மின்னகம் - Armature
- மின்னக சுருணை - Armature Winding
- மின்னக மின்னோட்டம் - Armature Current
- மின்னோட்ட இடைமாற்றி, நிலை மாற்றி - Commutator
- மின் தொடி - Brushes
- அச்சு - Axle
- சுற்றகம் - Rotor
- நிலையகம் - Stator
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.