மின்னணுவியல் தரவு இடைமாற்றம்
மின்னணுவியல் தரவு இடைமாற்றம் மின்னணு வழியாக தரவு பரிமாறிக்கொள்ளும் தரத்தை வழங்குகிறது. இது ஒரு மின்னணு தகவல் தொடர்பு அமைப்பாகும். இரு நிறுவனங்களுக்கிடையேயோ, இரு நாடுகளுக்கிடையெயோ ஒரே நியமங்களுடன் தரவுகளை அல்லது கோப்புகளை பரிமாறிக்கொள்ள மின்னணுவியல் தரவு இடைமாற்றம் உதவி செய்கிறது. இது 3௦ ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றது. X12, EDIFACT, ODETTE போன்ற பல்வேறு மின்னணுவியல் தரவு இடைமாற்ற நியமங்கள் பயன்பாட்டில் உள்ளன.
1996ல் நியமங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவத்தின்படி மின்னணுவியல் தரவு இடைமாற்றம் என்பது இரு கணினிகளுக்கிடையே பணம் சம்பந்தப்படாத ஆவணகளுக்கான வரையறுக்கப்பட்ட தகவல் பரிமாற்றம் ஆகும்." [1]
மேற்கோள்கள்
- Kantor, Michael (1996-04-29). "Electronic Data Interchange (EDI)". National Institute of Standards and Technology. பார்த்த நாள் 2008-05-13.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.