மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள்
கணிமையியலில் மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் (FLOPS, FLoating point OPerations per Second) என்பவை மிதப்புப் புள்ளி எண்களைக் கொண்டு செய்யப்படும் கணிதச் செயல்பாடுகளைக் குறிக்கும். பின்னங்களுடைய மெய்யெண்களைக் கணினியானது மிதப்புப் புள்ளி எண்களாகக் கருதிக் கொள்ளும். இவ்வெண்களைக் கொண்டு செய்யப்படும் கணிப்பீடுகள் மிதப்புப் புள்ளிக் கணிப்பீடுகள் (Floating Point Calculation) எனப்படும். பழைய கணினிகளில் இவ்வெண்களைக் கொண்டு கணிப்பீடுகளைச் செய்ய எனத் தனியாக ஓர் உட்கூறு (உட்பகுதி) பயன்படுத்தப்பட்டது. அது மிதப்புப் புள்ளிச் செயலகம் (Floating Point Unit - FPU) எனப்பட்டது. ஆனால் தற்போது மையச் செயலகத்திலேயே ஒருங்கமைந்து (inbuilt) வருகிறது. மிதப்புப் புள்ளிக் கணிப்பீடு என்பது அறிவியல் துறையில் மிகவும் கடினமான கணிப்பீடுகளைச் செய்ய, முன்பு பயன்படுத்தப்பட்ட ஓர் எளிய முறையான 'ஒரு நொடிக்கான கட்டளைகள்' (Instructions per second) என்பதைப் போன்ற ஓர் அளவுமுறை ஆகும்.
கணினியின் செயல்திறன் | ||
---|---|---|
பெயர் | ஃப்ளாப்புகள் (நொமிசெகள்) | |
yotta FLOPS | 1024 | |
zetta FLOPS | 1021 | |
exa FLOPS | 1018 | |
peta FLOPS | 1015 | |
tera FLOPS | 1012 | |
giga FLOPS | 109 | |
mega FLOPS | 106 | |
kilo FLOPS | 103 |
இது பொதுவாக ஆங்கிலத்தில் ஃப்ளாப்புகள் (FLOPS) என்று அழைக்கப் படுகிறது. இதனைத் தமிழில் நொடிக்குள் செய்யப்படும் மிதப்புப்புள்ளிச் செயல்பாடுகள் (நொமிசெகள்) என்று வழங்கப்படும். இது கணினியின் செயல்திறனை அளக்கப் பயன்படுகிறது. ஆங்கிலத்தில் FLOPS என்பதிலுள்ள S என்பது நொடிகள் என்பதைக் குறித்தாலும் பொதுவாக இது பன்மையாக்வும் பொருள் கொள்ளப்படுகிறது. ஒருமையில் இது மிதப்புப் புள்ளிச் செயல்பாடு (FLOP - FLoating Point Operation) எனப்படுகிறது. மிதப்புப் புள்ளிச் செயல்பாட்டு எண்ணிக்கை (Flop Count) என்பது ஒரு குறிப்பிட்ட நிரலைச் செயலாக்கவோ ஒரு படிமுறைத் தீர்வை நிறைவேற்ற்வோ எடுத்துக் கொள்ளும் நேரம் என்றும் வரையறுக்கப் படலாம்.
என்.இ.சி (NEC) நிப்பானிய நிறுவனத்தின் நிப்பா இன் SX-9 (எசு.எக்ஃசு-9) என்பதுதான் 100 கிகா ஃப்ளாப்பைத் தாண்டிய (நொமிசெகளைத் தாண்டிய) நெறிய நுண்செயலி கொண்ட முதல் மீத்திறன் கணினி ஆகும். ஐ.பி.எம்-இன் மீத்திறன் கணினியான உரோடு இரன்னர் தான் 1 பெட்டா ஃப்ளாப்பைத் தாண்டிய (ஒரு பெட்டா நொமிசெகளைத் தாண்டிய) முதல் மீத்திறன் கணினி என்பது மென்பொருள் நூலக நிரலோட்டத்தால் (Linepack Benchmark) அளவிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. சூன் 2010-இன் நிலவரத்தின் படி உலகின் "முதல் 500" மீத்திறன் கணினிகள் 32.4 அளவிலான கணிப்பீட்டுத் திறனைக் கொண்டுள்ளன.
ஒரு சிறிய அளவிலான கணிப்பானானது 10 மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் என்ற அளவில் இருந்தால் மட்டுமே அது செயல்படுகிறது என்று கூற முடியும்.
அளவீட்டு முறைகள்
மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளை அளவிடக் கணினிகளில் நிரலோட்டம் (Benchmark) என்ற ஒன்று அவசியத் தேவை ஆகும். இதற்கோர் எடுத்துக்காட்டுதான் மென்பொருள் நூலகம் (Linepack) ஆகும். வெறும் மிதப்புப் புள்ளிச் செயல்பாட்டை அளவிடுவது மட்டும் இதில் அடங்காது. இந்த வேகத்தை அளக்கும் செயலில் உள்ளீட்டு வெளியீட்டு செயல்பாடுகள், செயலிக்குள்ளான தகவற்பரிமாற்றம், ஓரியல்பு மீவேக நினைவகப் பரிமாற்றம், நினைவகப் படிமுறை போன்ற பல காரணிகள் தங்களுக்கே உரிய இடங்களைப் பகிர்கின்றன.
கணித்தலுக்கானச் செலவினங்கள்
வன்பொருள் செலவினங்கள் கீழ்க் காணும் அட்டவணையில் எப்படி வேகம் அதிகரிக்க அதிகரிக்க கணித்தலின் செலவு குறைகிறது என்பது விளக்கப் பட்டுள்ளது. கிகா மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளுக்கான தோராய செலவினம் என்பது ஒரு நொடியில் செய்யப்படும் நூறு கோடி மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளைக் குறிக்கின்றது.
நாள் | கிகா மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளுக்கான தோராய செலவினம் | தொழில்நுட்பம் | கருத்துரைகள் |
---|---|---|---|
1961 | US$1,100,000,000,000 ($1.1 திரில்லியன்), அல்லது ஒவ்வொரு மிதப்புப் புள்ளிச் செயல்பாட்டுக்கும் $1,100 செலவாகும். | கிட்டத்தட்ட 17 மில்லியன் IBM 1620 அலகுகள் ஒவ்வொன்றுக்கும் $64,000 செலவாகும். | 1620 பெருக்கல் செயல்பாடுகள் 17.7 மில்லி நொடிகள் நேரமெடுக்கும். |
1984 | US$15,000,000 | கிரேய் எக்சு-எம்.பி.(Cray X-MP) | |
1997 | US$30,000 | பென்டியம் புரோ நுண்செயலிகளுடன் கூடிய '16 செயலி' கொண்ட இரு பியோவுல்ஃப் தொகுப்பு. | |
ஏப்ரல் 2000 | $1,000 | புன்யிப் பியோவுல்ஃப் தொகுப்பு | புன்யிப் என்பதுதான் முதல் துணை-US$1/மெகா மிதப்புப் புள்ளிச் செயல்பாட்டுக் கணிப்பீட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். இது 2000-இல் கார்டன் பெல் என்ற பரிசைப் பெற்றது. |
மே 2000 | $640 | கிளாட்2 | கிளாட்2 என்பதுதான் US$1/மெகா மிதப்புப் புள்ளிச் செயல்பாட்டின் கீழ் இருக்கும்போது அதிகப்படியான பயன்பாடுகளைக் கையாண்டதாகும். |
ஆகத்து 2003 | $82 | கேசியோ | கேசியோ என்பதுதான் முதல் துணை-US$100/கிகா மிதப்புப் புள்ளிச் செயல்பாட்டுக் கணிப்பீட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். |
மார்ச்சு 2007 | $0.42 | அம்ப்ரிக் ஏ.எம்.2045 | |
செப்டம்பர் 2009 | $0.13 | ஏ.டி.ஐ. ரேடியான் ஆர்800 | 40 nm வரைகலைச் செயல்பாட்டு அலகுகள் என்ற அளவில் அதிகத் திறம்படைத்தது. இதனால் 3.04 டெரா மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் என்ற அளவை 950 மெகா ஹெர்ட்சில் இயங்கும்போது எட்ட முடியும். இங்குக் குறிப்பிடப் பட்டிருக்கும் விலை மிகச் சரியானது அன்று. ஏனெனில் ஒற்றைத் துல்லிய முறையில் வரைகலை அட்டையின் விலை மட்டுமே வரலாம். |
நவம்பர் 2009 | $0.59 (இரட்டைத் துல்லியம்); $0.14 (ஒற்றைத் துல்லியம்) | ஏ.எம்.டி. இரேடியான் எச்.டி. 5970 ஹெம்லாக் | ஏ.எம்.டி-யின் இரட்டை வரைகலைச் செயல்பாட்டு அட்டையுடன் இது மிகத் திறம்படைத்ததாக இருக்கிறது. இது இரட்டைத் துல்லிய முறையில் 1 டெரா மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் என்ற சாதனையை முறியடித்தது. இதனால் 2*725 மெகா ஹெர்ட்சில் இயங்கும்போது 4.64 டெரா மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளையும் (ஒற்றைத் துல்லியம்), 0,928 டெரா மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளையும் (இரட்டைத் துல்லியம்) எட்ட முடியும். ஒரு கிகா மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளுக்கான விலை மிகச் சரியானதன்று. ஏனெனில் அது வரைகலை அட்டையின் விலையை மட்டுமே கொண்டுள்ளது ($640). அது எப்போது வேண்டுமானாலும் குறையலாம். |
மேற்கோள்கள்
- "Number of Processors share for 06/2010". TOP500 Supercomputing Site. http://www.top500.org/stats/list/35/procclass. Retrieved June 1, 2010 .
- "Response Times: The Three Important Limits". Jakob Nielsen. http://www.useit.com/papers/responsetime.html. Retrieved June 11, 2008.
- Fildes, Jonathan (June 9, 2008). "Supercomputer sets petaflop pace". BBC News. http://news.bbc.co.uk/1/hi/technology/7443557.stm. Retrieved July 8, 2008.
- Summary: Fixed point (integer) vs Floating point Retrieved on December 25, 2009.
- Thibodeau, Patrick (June 10, 2008). "IBM breaks petaflop barrier". InfoWorld
- http://ed-thelen.org/comp-hist/BRL61-ibm1401.html IBM 1961 BRL Report
- http://loki-www.lanl.gov/papers/sc97/ Loki and Hyglac
- http://aggregate.org/KLAT2/ The Aggregate
- http://aggregate.org/KASY0/ The Aggregate - KASY0]
- http://www.ambric.com/pdf/MPR_Ambric_Article_10-06_204101.pdf 204101.qxd|accessdate=July 8, 2008|format=|archiveurl = http://web.archive.org/web/20080627111128/http%3A//www.ambric.com/pdf/MPR_Ambric_Article_10-06_204101.pdf |archivedate = June 27, 2008|deadurl=yes
- http://www.brightsideofnews.com/news/2009/9/29/the-fastest-ati-5870-card-achieves-3tflops!.aspx%7Ctitle=The fastest ATI 5870 card achieves 3TFLOPS!
- http://www.heise.de/newsticker/meldung/Grafik-Geruechte-Radeon-HD-5970-kommt-am-19-November-845774.html
- http://www.techterms.com/definition/floatingpoint
- http://www.cs.princeton.edu/introcs/91float/
- http://www.thefreedictionary.com/floating-point+operation