மாவலித்துறை

மாவலித்துறை அல்லது மாவிலித்துறை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவில் உள்ள ஒரு படகுத் துறைமுகம் ஆகும். இத்துறைமுகமே இன்று நெடுந்தீவு மக்கள் ஏனைய தீவுகளுக்கும், யாழ். குடாநாட்டிற்கும் கடல் மூலம் பிரயாணம் செய்யப்படும் முக்கிய துறைமுகமாகவும் விளங்குகிறது. இது ஏறக்குறைய 300 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டது.

மாவலித்துறை

பெயர்க்காரணம்

'மா' என்ற சொல்லுக்கு குதிரை என்ற அர்த்தம் உள்ளது. எனவே குதிரைகள் ஏற்றி இறக்கியதனாலேயே மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று என்பர். ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் குதிரைகளை இத்துறையூடாக இறக்கி ஏற்றினார்கள்[1].

வெளிச்சவீடு

ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்த மாவிலித் துறைமுகத்தில் உள்ள வெளிச்ச வீடு மூன்று உருளைத் தூண்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கட்டப்பட்டது போல் அமைவு பெற்று அதன் மேல் கூம்பு வடிவமான ஓர் முடியும் காணப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வகையான வெளிச்ச வீடுகளும் கப்பல் திசை மாறாது செல்வதற்கு ஒவ்வொரு வகையான ஒளிச் சமிக்ஞைகளைக் கொண்டுள்ளது. இந்த வெளிச்ச வீடு 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது இரவில் தொடர்ந்து ஒளியை வீசிய வண்ணம் அமைவுபெற்று விளங்குகின்றது[1].

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.