மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி

மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயற்படும் தேசிய அறிவியல் அருங்காட்சியம் சபையின் கட்டுப்பாட்டில் செயற்படுகிறது. இது 1987 பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது

மாவட்ட அறிவியல் மையம்
நிறுவப்பட்டது27 பிப்ரவரி 1987
அமைவிடம்கொக்கிரகுளம், திருநெல்வேலி-627 009.
வலைத்தளம்http://www.dsctirunelveli.org.in/index.php

அமைவிடம்

இது திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில், தாமிரபரணி ஆற்றின் கரையோரம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அருகே கொக்கிரகுளத்தில் அமைந்துள்ளது


அம்சங்கள்

தற்போது நான்கு காட்சியகங்கள் உள்ளது.

  • பொழுதுபோக்கு அறிவியல் காட்சியகம்
  • புகழ்மிக்க அறிவியல் காட்சியகம்
  • மின்னியல் காட்சியகம்
  • மின்னியலின் புதுச்சிறகு காட்சியகம்
  • தொலைக்காட்சி ஸ்டுடீயோ,
  • வரலாற்றுக்கு முந்தைய பூங்கா ஆகியன உள்ளது.
  • இந்த மையத்திலுள்ள 'மாயக் கண்ணாடி பகுதி' கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது.
  • இம்மையத்திலுள்ள 'டிஜிட்டல் பிளானேட்டரியம்' பார்வையாளர்களை வானியலின் அதிசயங்களை நோக்கி ஈர்க்கிறது.
  • இம்மையம் 1988லிருந்து அறிவியல் கண்காட்சி பேருந்தினை செலுத்துகிறது. இது தமிழ்நாட்டின் கிராம்ப்புற பகுதிகளுக்கு அறிவியல் செய்திகளை கொண்டு சேர்க்கிறது
  • முப்பரிமான சிறிய திரையரங்கம்,[1]

இந்த திரையரங்கில் காலை 11 மணி, நண்பகல் 12 மணி, மாலை 3, 4, 5 மணிக்கு தினந்தோறும் 15 முதல் 20 நிமிடம் ஒடக்கூடிய பின்வரும் படங்கள் திரையிடப்படுகிறது, 'ரோஸ்வெல் சம்பவம்', 'இன்னர் ஸ்பேசு', 'மாஸ்டர் ஆப் மேஜிக்', 'ஜீ அனிமல்', 'ஷார்க் தீவு', 'டைனோ தீவு', 'கேட் அன்ட் மவுஸ்', 'ரேர் ப்ளோரா' மற்றும் 'வானத்திற்கு அப்பால்'.


அலுவலக நேரம்

  • இந்த மையம் காலை 10:30 முதல் மாலை 6:30 வரை செயற்படும். இந்த மையம் பொங்கல் மற்றும் தீபாவளி ஆகிய இருநாட்களைத் தவிர்த்து, வருடம் முழுவதும் திறந்திருக்கும்.

கட்டண விபரங்கள்

பொதுமக்கள்பொதுமக்கள் 25க்கும் மேற்பட்ட நபர்கள்பள்ளி/கல்லூரி குழுவறுமைக்கோட்டிற்கு கீழ் BPL அட்டையுடன்
நுழைவுக் கட்டணம்Rs.15/-Rs.10/-Rs.10/-Rs.05/-
3D திரையரங்க கட்டணம்Rs.25/-Rs.10/-Rs.10/-Rs.10/-
டிஜிட்டல் கோளரங்கம் கட்டணம்Rs.25/-Rs.15/-Rs.15/-Rs.05/-
அறிவியல் காட்சிகள்Rs.15/-Rs.10/-Rs.10/-Rs.05/-

இவற்றையும் காண்க

  • List of planetariums


வெளிஇணைப்புகள்

சான்றுகள்

  1. "Mini3d". தி இந்து. 7 January 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Mini-3D-theatre-established-at-District-Science-Centre/article16347133.ece. பார்த்த நாள்: 27 February 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.