மால்கம் மக்கரிச்

மால்கம் மக்கரிச் (Thomas Malcolm Muggeridge 24 மார்ச்சு 1903–14 நவம்பர் 1990) என்பவர் பிரித்தானிய இதழாளர் எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.[1]

மால்கம் மக்கரிச்

இரண்டாம் உலகப் போரில் படை வீரராகவும் உளவாளியாகவும் பணியாற்றினார். தொடக்கத்தில் இடதுசாரிக் கொள்கையராகவும் பிற்காலத்தில் பொதுவுடைமைத் தத்துவத்தை எதிர்ப்பவராகவும் மாறினார்.மேற்கத்திய நாடுகளில் அதிகமாக அறியப்படாமல் இருந்த அன்னை தெரசாவை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. இவரைப் பற்றிய தன் வரலாற்று நூல் இரண்டு தொகுதிகளாக வெளி வந்து அறிவுலகில் பிரபலாமானது. இவர் சில காலம் இந்தியாவிற்கு வந்து கொல்கத்தாவில் வாழ்ந்து வந்தார். 1934 முதல் 1936 வரை கொல்கத்தாவில் ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணி ஆற்றினார். சில ஆண்டுகள் தனியாகக் கொல்கத்தாவில் வாழ்ந்து வந்தார்.

மேற்கோள்

  1. My Life in Pictures ISBN 0-906969-60-3
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.