மாறுபக்கச்சவ்வுப் புரதம்

உயிரணு மென்சவ்வின் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லும் புரதம் மாறுபக்கச்சவ்வுப் புரதம் (transmembrane protein; TP) எனப்படும். பல்வேறு மாறுபக்கச் சவ்வுப்புரதங்களும் குறிப்பிட்ட பொருள்களை உயிரியசவ்வின் ஊடாகக் செல் உள்ளேயும் அல்லது கழிவாக உள்ள உடன் விளைபொருள்களை செல்லுக்கு வெளியேயும் கடத்துவதற்கு அனுமதித்தோ அல்லது மறுத்தோ செயல்படும் வாயில்களாக அல்லது பொருளேற்ற தளங்களாக உள்ளன. அனைத்து மாறுபக்கச்சவ்வுப் புரதங்களும் ஒருங்கிணைந்த சவ்வுப் புரதங்களாகும். ஆனால், ஒருங்கிணைந்த சவ்வுப் புரதங்கள் அனைத்தும் மாறுபக்கச்சவ்வுப் புரதங்கள் இல்லை[1]. மாறுபக்கப் புரதங்களில் ஆல்ஃபா-சுருளை மற்றும் பீட்டா உருளை என இரண்டு அடிப்படையான வகைகள் உள்ளன[2].

மாறுபக்கச்சவ்வுப் புரதங்களின் வரைபடம்: 1. ஒற்றை மாறுபக்க ஆல்ஃபா-சுருளை (ஒற்றைவழி சவ்வுப்புரதம்) 2. பல்வழி மாறுபக்கச்சவ்வு ஆல்ஃபா-சுருளை வடிவப் புரதம் 3. பல்வழி மாறுபக்கச்சவ்வு பீட்டா தகடு புரதம். சவ்வு வெளிர்பழுப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது

மேற்கோள்கள்

  1. Steven R. Goodman (2008). Medical cell biology. Academic Press. பக். 37–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-370458-0. http://books.google.com/books?id=WO6EVUgWw7AC&pg=PA37. பார்த்த நாள்: 24 November 2010.
  2. Jin Xiong (2006). Essential bioinformatics. Cambridge University Press. பக். 208–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-84098-9. http://books.google.com/books?id=AFsu7_goA8kC&pg=PA208. பார்த்த நாள்: 13 November 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.