மார்செலோ எச். டெல் பிலார்

மார்செலோ எச். டெல் பிலார் வய் கட்மைட்டன் (Marcelo H. del Pilar பிறப்பு:ஆகத்து 30, 1850 – சூலை 4, 1896) பிளாரிடல் (Plaridel) எனும் புனைபெயரால் நன்கு அறியப்பட்டவர், பிலிப்பீனிய எழுத்தாளர், சட்டத்தரணி மற்றும் பத்திராசிரியர் ஆவார்.[1] எசுப்பானிய சீர்திருத்த இயக்கத்தைப் பற்றிய லா சொலிடாரிடட் (தோழமை) எனும் பத்திரிகையின் இரண்டாவதும் கடைசியுமான பதிப்பாசிரியர் இவரே.[2] ஆகத்து 30 ஆம் நாள் 1850 ஆம் ஆண்டில் புலுக்கான் எனும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஜூலியன் எச். டெல் பிலார் மற்றும் தாய் பிளாசா கட்மைட்டன் ஆவர். கொலிஜியோ டி சன் ஜோசே மற்றும் சன்டோ தோமஸ் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை இவர் மேற்கொண்டார். இவரது மனைவியின் பெயர் மார்சினா எச். டெல் பிலார் ஆகும். இவருக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.

மார்செலோ எச். டெல் பிலார் (Marcelo H. del Pilar)
மார்செலோ எச். டெல் பிலார் c. 1889
பிறப்புமார்செலோ ஹிலாரியோ டெல் பிலார் வய் கட்மைய்ட்டன்
ஆகத்து 30, 1850
புலுக்கான், புலுக்கான், பிலிப்பீன்சு
இறப்புசூலை 4, 1896(1896-07-04) (அகவை 45)
பார்செலோனா, எசுப்பானியா
இறப்பிற்கான
காரணம்
காச நோய்
தேசியம்பிலிப்பினோ
படித்த கல்வி நிறுவனங்கள்கொலிஜியோ டி சன் ஜோசே
சான்டோ தோமஸ் பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர், சட்டத்தரணி, பத்திரிக்கையாசிரியர்
அமைப்பு(கள்)லா சொலிடாரிடட்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
பெற்றோர்ஜூலியன் எச். டெல் பிலார் (தந்தை)
பிளாசா கட்மைய்ட்டன் (தாய்)
வாழ்க்கைத்
துணை
மார்சினா எச். டெல் பிலார்
(1878–1896; இறப்பு வரை)
பிள்ளைகள்சொஃபியா எச். டெல் பிலார்
அனித்தா எச். டெல் பிலார் டி மரசிகன்

மேற்கோள்கள்

  1. Kahayon 1989, p. 52.
  2. Keat 2004, p. 756

நூற்பட்டியல்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.