மா. பா. குருசாமி

மா. பா. குருசாமி (பிறப்பு: ஜனவரி 15, 1936) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். விருதுநகர் மாவட்டம், பாறைப்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். இவர் 130க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். நல்லாசிரியர் விருது, குறள் படைப்புச் செம்மல், தமிழக அரசின் சிறப்பு முதல்வர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “அக்கினிக் குஞ்சு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை ) வகைப்பாட்டிலும், "காந்தியப் பொருளியல்" எனும் நூல் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல் வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.

குறள் கதைகள் எனும் இவரின் நூலில் முப்பது திருக்குறள்களை வள்ளுவர் எந்த சூழலில் எழுதினார் என்பது வள்ளுவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களாக இடம்பெற்றுள்ளன. வாழ்வியல் நிகழ்வுகளையே வள்ளுவர் குறளாகத் தந்தார் என்ற இவர் கூறுகின்றார்.

ஆதாரம்

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.