மலேசிய வானொலி

மலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் (Radio Televisyen Malaysia), மலேசிய அரசுக்கு சொந்தமான ஓர் ஒலி, ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். சுருக்கமாக அதனை ஆர்.டி.எம் என்று அழைக்கிறார்கள். அந்த நிறுவனம் பல நிலையங்களை கோலாலம்பூரில் இருந்து நடத்தி வருகின்றது. தற்சமயம் மலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் நடத்தி வரும் நிலையங்கள்

  • 6 தேசிய ஒலி, ஒளிபரப்பு நிலையங்கள்
  • 2 அனைத்துலக நிலையங்கள்
  • 17 மாநில நிலையங்கள்
  • 11 மாவட்ட வானொலி நிலையங்கள்
மலேசிய ஒலி
ஒளிபரப்புக் கழகம்
Typeபொது
மலேசிய வானொலி தொலைக்காட்சி
(ஆர்.டி.எம்)
17 நவம்பர் 1969-இல் இருந்து
Countryமலேசியா
First air date
1 ஏப்ரல் 1946-இல் இருந்து
ரேடியோ மலாயா
16 செப்டம்பர் 1963-இல் இருந்து
மலேசிய வானொலி
28 டிசம்பர் 1963-இல் இருந்து
மலேசியத் தொலைக்காட்சி
17 நவம்பர் 1969-இல் இருந்து
மலேசிய வானொலி தொலைக்காட்சி
(ஆர்.டி.எம்)
Availabilityநாடு முழுமையும்
Foundedஏப்ரல் 1, 1946 (1946-04-01)
Headquartersஅங்காசாபுரி, கோலாலம்பூர், மலேசியா
Broadcast area
மலேசியா
சிங்கப்பூர்
புருணை
Ownerமலேசிய ஒலி,ஒளிபரப்புக் கழகம்
Parentமலேசியத் தகவல், தொடர்பு துறை, கலாசார அமைச்சு
Key people
இப்ராஹிம் யாஹ்யா
(தலைமை நிர்வாகி)
Launch date
1 ஏப்ரல் 1946
Official website
http://www.rtm.gov.my

மலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் நடத்தி வரும் ஒளிபரப்பு நிலையங்கள்

  • TV1
  • TV2

TV1 தொலைக்காட்சி காலை 06.00 மணியில் இருந்து மறுநாள் 1.00 வரை ஒளிபரப்பு செய்கிறது. TV2 தொலைக்காட்சி மட்டும் 24 மணி நேரச் சேவையை வழங்குகிறது. மலேசிய ஊடகச் சந்தையில் மலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் 17 விழுக்காடு ரசிகர்களைக் கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் TV3, ntv7, 8TV, TV9 எனும் மீடியா பிரைமா தனியார் நிறுவனம் உள்ளது. அடுத்து அஸ்ட்ரோ நிறுவனம் வருகிறது.

வரலாறு

மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையம் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி சிங்கப்பூரில் அமைக்கப் பட்டது.[1] 1957 ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்ததும் மலாயா வானொலி, சிங்கை வானொலி என்று இரண்டாகப் பிரிந்தது. மலாயா வானொலி பின்னர் மலேசிய வானொலி என்று பெயர் மாற்றம் கண்டது.[2]

1963 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தொலைக்காட்சி மலேசியாவில் அறிமுகம் ஆனதும் அதற்கு மலேசிய வானொலி தொலைக்காட்சி எனும் புதிய பெயர் கிடைத்தது 1963 டிசம்பர் 28 ஆம் தேதி தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தொடங்கின.

1968 ஆம் ஆண்டு இரண்டாவது ஒளிபரப்பு அலை அங்காசாபுரியில் இருந்து தனது சேவைகளைத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டு கல்வி ஒளிபரப்பு தொடங்கப் பெற்றது.

வானொலி நிலையங்கள்

தேசிய ஒலிபரப்பு
  • கிலாசிக் நேஷனல் எப்.எம் (மலாய்)
  • மியூசிக் எப்.எம் (மலாய்)
  • டிராக்ஸ் எப்.எம் (ஆங்கிலம்)
  • ஆய் எப்.எம் (சீனம்)
  • மின்னல் எப்.எம் (தமிழ்)
  • ஆசிக் எப்.எம் (பூர்வீக மொழிகள்)
அனைத்துலக ஒலிபரப்பு
  • மலேசியக் குரல் 1
  • மலேசியக் குரல் 2
மாநில ஒலிபரப்பு
  • பெர்லிஸ்: பெர்லிஸ் எப்.எம்
  • கெடா: கெடா எப்.எம்
  • பினாங்கு: முத்தியாரா எப்.எம்
  • பேராக்: பேராக் எப்.எம்
  • சிலாங்கூர்: சிலாங்கூர் எப்.எம் , கே.எல் எப்.எம்
  • கோலாலம்பூர்: சிலாங்கூர் எப்.எம் , கே.எல் எப்.எம் (முன்பு மலேசிய வானொலி கே.எல் )
  • நெகிரி செம்பிலான்: நெகிரி எப்.எம்
  • மலாக்கா: மலாக்கா எப்.எம்
  • ஜொகூர்: ஜொகூர்எப்.எம்
  • பகாங்:பகாங் எப்.எம்
  • திரங்கானு: திரங்கானு எப்.எம்
  • கிளந்தான்: கிளந்தான் எப்.எம்
  • சரவாக்: சரவாக் எப்.எம்
  • வாய் எப்.எம் (முன்பு மலேசிய வானொலி சரவாக் பூர்வீகம் ஒலி அலை)
  • ரெட் எப்.எம் (முன்பு மலேசிய வானொலி சரவாக் சிகப்பு ஒலி அலை)
  • சபா: சபா எப்.எம்
  • சபா எப்.எம் V (முன்பு மலேசிய வானொலி பலவகை சபா ஒலி அலை)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.