மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி
மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி (மலாய்: Parti Bersatu Sasa Malaysia (BERSAMA), அல்லது (ஆங்கிலம்:Malaysia United People's Party (MUPP) என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு தேசியவாத அரசியல் கட்சியாகும். முன்பு இந்தக் கட்சி (மலாய்: Parti Demokratik Setiahati Kuasa Rakyat Bersatu Sabah (SETIA) என்று அழைக்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் பெயர் இரு முறைகள் மாற்றம் அடைந்துள்ளன.[1]
மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி Malaysian United People's Party Parti Bersatu Sasa Malaysia | |
---|---|
![]() | |
தலைவர் | சுஹாய்டின் லங்காப் |
தொடக்கம் | 23 மார்ச் 2011 (1994 - செத்தியா) |
தலைமையகம் | ![]() |
இளைஞர் அமைப்பு | அயேரி இசினில் சாக்வான் |
கொள்கை | தேசியவாதம், ஜனநாயகம் |
நிறங்கள் | சிவப்பு, வெள்ளை |
இணையதளம் | |
Laman web Parti BERSAMA |
இந்தக் கட்சி, 1994 ஆம் ஆண்டு, சுஹாய்டின் லங்காப் என்பவரால் சபா மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.[2] தேசியவாத அரசியல் கட்சியாக இருந்தாலும் பல்லின மக்கள் உறுப்பியம் பெறுவதற்கு கட்சியின் சட்டவிதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சபா மாநிலத் தேர்தல்களில் எதிரணிக் கட்சியாக விளங்கியுள்ளது.[3][4] 2011 மார்ச் 23 இல் இக்கட்சியின் செத்தியா எனும் அழைப்புப் பெயர் பெர்சாமா என்று மாற்றப்பட்டது.[5]
மேற்கோள்கள்
- PARTI YANG BERDAFTAR DENGAN SPR.
- Jeffrey to revive dormant political party, 2 February 2011, Wikisabah
- Pembangkang Sabah janji tambah Adun, 18 Feb 2008, Malaysiakini
- OPPOSITION LOOKING FOR RIGHT ALCHEMY TO TOPPLE BN, 25 Feb 2004, BERNAMA
- Parti politik BERSAMA umum hasrat tanding PRU-13, 28 Jun 2011, BERNAMA