மலேசிய அன்புக் கட்சி

மலேசிய அன்புக் கட்சி (மலாய்: Parti Cinta Malaysia (BERSAMA), அல்லது (ஆங்கிலம்:Love Malaysia Party)[1] என்பது மேற்கு மலேசியா, பினாங்கு மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி, 6 ஆகஸ்டு 2009 இல் தோற்றுவிக்கப்பட்டது. கெராக்கான் கட்சியின் உதவித் தலைவராக இருந்த ஹுவான் செங் குவான், சரவாக் மாநிலத்தின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் கேபிரியல் அடிட் டிமோங் போன்றோர், மலேசிய அன்புக் கட்சியின் உறுப்பினர்களாக இணைந்தனர்.

மலேசிய அன்புக் கட்சி
Love Malaysia Party
Parti Cinta Malaysia
தலைவர்தாங் வெங் சிவ்
செயலாளர் நாயகம்லூ கியென் சியாங்
தொடக்கம்6 ஆகஸ்டு 2009
தலைமையகம்புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு
இளைஞர் அமைப்புஅயேரி இசினில் சாக்வான்
கொள்கைசமூக ஜனநாயகம்
நிறங்கள்சிவப்பு, வெள்ளை
இணையதளம்
Facebook Parti Cinta Malaysia

2011 ஆம் ஆண்டு சரவாக் மாநிலத் தேர்தலில், நிகேமா, சிமுஞ்சான், பாலாய் ரிங்கின், மாச்சான், பேகெனு ஆகிய ஐந்து இடங்களில் இக்கட்சி போட்டியிட்டது. அத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் அக்கட்சி தோல்வி அடைந்தது. மலேசிய அன்புக் கட்சியின் சரவாக் மாநிலத் தலைவராக இருந்த கேபிரியல் அடிட் டிமோங், 995 வாக்குகள் வித்தியாசத்தில் நிகேமா சட்டமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

2013இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலேசிய அன்புக் கட்சி போட்டியிட்ட எல்லா இடங்களிலும்[2] தோல்வி அடைந்தது. அதனால், பினாங்கு மாநிலத்தில் இருந்த தனது 13 சேவை மையங்களையும் மலேசிய அன்புக் கட்சி மூடிவிட்டது.[3]

மேற்கோள்கள்

மேலும் தகவல்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.