மலாக்கா நீரிணை

மலாக்கா நீரிணை (ஆங்கிலம்:Strait of Malacca, மலாய்: Selat Melaka, இந்தோனேசியம்: Selat Malaka, தாய்: ช่องแคบมะละกา, சீன மொழி: 马六甲海峡)மலேசியத் தீபகற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவுக்குமிடையில் உள்ள 805 கி.மீ நீளமான நீரிணையாகும். உலகின் மிக முக்கிய கப்பற்பாதையாக உள்ள இந்த நீரிணையின் முக்கியத்துவம் சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் ஆகியவற்றுக்கு ஒப்பானது. இந்த நீரிணை பசுபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைப்பதாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் 50,000 கடற்கலங்கள் இந்நீரிணையில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் இந்நீரிணையில் கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மலேசியாவின் மலாக்கா மாகாணத்தின் பெயரை இந்நீரிணை பெற்றுள்ளது. இந்நீரிணை இந்தியா, சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா ஆகிய ஆசியாவின் பெரும் பொருளாதார நாடுகளை இணைக்கிறது.

மலாக்கா நீரிணை
ஆங்கிலம்:Strait of Malacca
மலாய்: Selat Melaka
இந்தோனேசியம்: Selat Malaka
தாய்: ช่องแคบมะละกา
சீன மொழி: 马六甲海峡
ஆள்கூறுகள்4°N 100°E
வகைநீரிணை
வடிநில நாடுகள் தாய்லாந்து
 மலேசியா
 சிங்கப்பூர்
 இந்தோனேசியா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.