மறம்

மறம் என்ற தமிழ்ச் சொல்லில் தீரம், வீரம், சினம், சீற்றம், வலிமை, ஆற்றல், வெற்றி, அமர், அழித்தல், கொல்லல் என பத்துப் பண்புகளும் அடங்கியிருக்கிறது. இவைகளைப் பற்றி ”ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம்” என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்துப் பண்புகள்

மறம் என்ற சொல் குறிக்கும் பத்துப் பண்புகளின் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது:

தீரம் : எதையும் துணிவுடன் செயல்படுத்தும் திறன்.

வீரம் : பராக்கிரமமான மனவலிமை, எச்சூழ்நிலையிலும் தளரா மனம், ஆயிரம் பேர் எதிர்கொண்டாலும் ஒற்றை ஆளாய் நின்று சமாளிக்கும் (எதிர்க்கும்) திறன்.

வலிமை : தனது நிலைபாட்டின் மீது உள்ள உறுதி, பலம். அதாவது நக்கீரன் தனது வாதத்தின் மீது வைத்துள்ள நிலைபாட்டை போல.

ஆற்றல் : எதையும் காலம் தாழ்த்தாமல் விரைவில் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருத்தல்.

சினம்  : கோபம்.

சீற்றம்  : அநீதிகளைக் கண்டு பொங்கி எழுதல் மற்றும் ஒரு செயலின் மீதான தீவிரம்.

அமர்  : உக்கிரமான போர்முறைகளில் கைதேர்ந்தவர்கள்; எச்செயலிலும் பின்வாங்காதவர்கள்.

அழித்தல் : ஒரு செயலுக்குத் தீர்க்கமான முடிவெடுத்தல்; அச்செயல் மீண்டும் உருப்பெறாமல்அழித்தல்.

வெற்றி  : செயல்களனைத்தையும் நீதிக்கு உடன்பட்டு களிப்புறுதல், தோல்விக்குத் தினம் தினம் முற்று வைத்தல்.

கொல்லுதல்: நீதிக்குத் தலைவணங்கல். மனுநீதி சோழனைப் போல, நீதிக்குப் பிறகே மற்றவை(பந்தபாசம்) எல்லாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.