மர்மரா கடல்

மர்மரா கடல் (Sea of Marmara) ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். இதுவே கருங்கடலை ஏஜியக் கடலுடன் இணைக்கிறது; துருக்கியின் ஆசிய நிலப்பகுதிகளை அதன் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. போஸ்போரஸ் நீரிணை மூலம் கருங்கடலுடனும், டார்டெனெல்லஸ் நீரிணை மூலம் ஏஜியக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 11,350 சதுர கிமீ; அதிகபட்ச ஆழம் 1,370 மீ.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.