மரையிடாக் குழல் (சுடுகலன்)
குழலின் உட்புறத்தில், மரைகள் வார்க்கப்படாமல் வழுவழுப்பாகவே விடப்பட்டிருக்கும் ஆயுதமே, மரையிடாக் குழல் ஆயுதம் ஆகும். கையடக்க சுடுகலங்களில் இருந்து, சக்திவாய்ந்த கவசவூர்த்தி துமுக்கி மற்றும் பெரிய மோர்டர் பீரங்கிகள் வரை; மரையிடாக் குழல்களின் வகைகள் உண்டு. பெரும்பாலான சிதறு துப்பாக்கிகள் மரையற்ற குழலைத்தான் கொண்டிருக்கும்.

ஒரு 81மி.மீ. மரையிடாக் குழலுடைய எல்.16 மோர்டர்

11" மரையிடாக் குழலுடைய டால்கிரெண் துப்பாக்கிளுடன் யூ,எஸ்.எஸ். மானிட்டர் (1862) கப்பல்.
சுடுகலன்களின் வரலாறும் மரையிடுதலும்
முற்கால சுடுகலன்கள் வழுவழுப்பான குழல்களை கொண்டிருந்ததால், சுடப்பட்ட எறியங்கள் குறிப்பிடும்படியான நிலையான சுழற்சியை கொண்டிருக்காது.[1] எறியத்தின் தேவையற்ற புரளுதல், அதை திசைதிருப்பி துல்லியமின்மையை உண்டாக்கும்.
குழலினுள் சுருளை வடிவத்திலோ அல்லது பல்கோண வடிவத்திலோ மரையிடுவதால், எரியத்தின்மீது ஒரு நிலையான சுழற்சியை ஏற்படுத்தும். இதனால் எறியம் பறக்கையில், அதை திசைதிருப்பும் இதர சுழற்சிகள் தவிர்க்கப்படுகின்றன.
மேலும் பார்க்க
- மரையிடுதல்
- Buck and ball
- பொட்டடி துப்பாக்கி / தீபாவளி துப்பாக்கி / பொம்மை துப்பாக்கி
- பொட்டடி இயங்குநுட்பம்
- அக எறியியல்
- மீனியே தோட்டா
- வெடிமருந்து
- பீரங்கி
- வாய்வழி-குண்டேற்ற சுடுகலன்
- சன்னவாய்
- துமுக்கிக் குழல்
- எறியம்
மேற்கோள்கள்
- Fadala, Sam (17 November 2006). The Complete Blackpowder Handbook. Iola, Wisconsin: Gun Digest Books. பக். 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89689-390-1. https://books.google.com/books?id=Dzxyneq43AEC&pg=PA308.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.