மரையாணி

மரையாணி (ஆங்:BOLT) வெளிப்புறமாக மறை கொண்ட ஒரு வடிவம் ஆகும். மரையாணி மரைவில்லையுடன் சேர்ந்தே இயங்கும். இது திருகாணியுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தாலும், இது திருகாணியுடன் வேறுபடுகிறது.[1]

மரையாணி மற்றும் மரைவில்லை

மரையாணி மற்றும் திருகாணி வேறுபாடுகள்

மரையானியின் இணைப்பு
திருகாணியின் இணைப்பு

மரையாணி மற்றும் திருகாணிகளுக்கிடையே உள்ள வேறுபாடு பொதுவாக தவறாக புரிந்துகொள்ளபடுகிறது. இங்கு மரையாணி மற்றும் திருகாணிகளுக்கிடையே பல நடைமுறை வேறுபாடுகள் இருப்பினும், அவை சில கோணங்களில் பொருந்துகிறது. 

இயந்திரங்களின் கையேட்டின்படி[2] அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடானது: மரையாணியானது மறைகள் இல்லாத இரண்டு பொருட்களை மரைவில்லையின் உதவி கொண்டு இணைக்கிறது. மாறாக திருகாணியினை பயன்படுத்தும்பொழுது இணைக்கப்பட வேண்டிய பொருள்களினுள் ஒன்றாவது உள்மறையைக் கொண்டிருக்கும், சிலநேரங்களில் திருகாணியை பொருள்களினுள் திருக்குவதன் மூலம் தானாகவே மறையை ஏற்படுத்தியும் பொருத்தலாம். பெரும்பாலான மறை இணைப்பான்கள் அதன் பயன்பாட்டினை பொறுத்து, மரையாணி அல்லது திருகாணி என்று விவரிக்கப்படுகிறது.

முதலாவது மரையாணி சதுர வடிவ தலையாக காய்ச்சி வடிக்கப்பட்டது. இன்றளவும் இது காணப்பட்டாலும், பெரும்பாலும் அறுகோண தலையே பொதுவாக காணப்படுகிறது. இவைகள் பல்வேறு வகையிலான திருகுச்சாவியினால் பிடிக்கப்பட்டு திருகப்படுகிறது. பெரும்பாலானவை புறமிருந்து பிடிக்கப்படுகிறது, சில நேர்கோட்டில் பிடிக்கப்படுகிறது. மேலும் சில மரையாணிகள் டி-தலை மற்றும் பிளவுபட்ட தலை வடிவிலிருக்கிறது.[3]

சான்றுகள்

  1. "Bolt | Definition of Bolt by Merriam-Webster". Merriam-webster.com. பார்த்த நாள் 2016-04-11.
  2. Machinery's Handbook (Twenty-First ). New York: Industrial Press. 1980. பக். 1131.
  3. "What is a bolt?".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.