மருதநாட்டு வீரன்

மருதநாட்டு வீரன் 1961 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜமுனா, பி. எஸ். வீரப்பா, கண்ணாம்பா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]

மருதநாட்டு வீரன்
சுவரொட்டி
இயக்கம்டி. ஆர், ரகுநாத்
தயாரிப்புபி. ராதாகிருஷ்ணா
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜமுனா
பி. எஸ். வீரப்பா
பி. கண்ணாம்பா
மற்றும் பலர்
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புடி. ஆர். ரகுநாத்
பி. கே. கிருஷ்ணன்
ஏ. பி. ஜெகதீஸ்
கலையகம்ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவீஸ்
வெளியீடுஆகத்து 24, 1961 (1961-08-24)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதைச் சுருக்கம்

ஜீவகன் ஒரு துணிச்சலான இளைஞன். இளவரசி இரத்னாவின் தலைமைக் காவலனாக அவன் நியமிக்கப்படுகிறான். அவனுக்கும் இளவரசிக்குமிடையில் காதல் மலர்கிறது. வீரகேசன் என்பவன் அரசனின் அமைச்சராக இருக்கிறான். இந்த அரசின் விரோதியான சுல்தான் ஒருவனுடன் வீரகேசன் தொடர்பு கொண்டு சதிச் செயலில் ஈடுபட்டிருக்கிறான். வீரகேசன் ஜீவகன் மீது தேசத்துரோகக் குற்றஞ்சாட்டி அரசரும் நாட்டு மக்களும் ஜீவகனை வெறுக்கும்படி செய்து விடுகிறான். ஜீவகன் தான் நிரபராதி என நிரூபித்து நாட்டையும் அரசரையும் சூழ்ச்சியிலிருந்து எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

தயாரிப்புக் குழு

  • தயாரிப்பாளர்: பி. ராதாகிருஷ்ணா
  • தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவீஸ்
  • இயக்குநர்: டி. ஆர். ரகுநாத்
  • இசை: எஸ். வி. வெங்கட்ராமன்
  • பாடலாசிரியர்கள்: கண்ணதாசன் & ஏ. மருதகாசி
  • கலை: கே. நாகேஸ்வர ராவ்
  • தொகுப்பாளர்கள்: டி. ஆர். ரகுநாத், பி. கே. கிருஷ்ணன் & ஏ. பி. ஜெகதீஸ்
  • நடன ஆசிரியர்: பி. எஸ். கோபாலகிருஷ்ணன்
  • ஒளிப்பதிவு: ஆர். சம்பத்
  • சண்டைப்பயிற்சி: ஸ்டன்ட் சோமு
  • ஒலிப்பதிவு: ஏ. கிருஷ்ணன்

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் எஸ். வி. வெங்கட்ராமன். பாடல்களை இயற்றியோர்: கண்ணதாசன், ஏ. மருதகாசி. பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், ஏ. எல். ராகவன், பி. சுசீலா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர்.

எண்.பாடல்பாடகர்/கள்பாடலாசிரியர்கால அளவு (நி:செ)
1பருவம் பார்த்து அருகில்டி. எம். சௌந்தரராஜன்03:46
2விழியலை மேலே செம்மீன் போலேடி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா05:57
3சமாதானமே தேவைடி. எம். சௌந்தரராஜன்04:07
4செய்கைக்கொரு சந்தேகம் கேளு கண்மணிஏ. எல். ராகவன் & ஏ. ஜி. ரத்னமாலா03:11
5புது இன்பம் ஒன்று உருவாகி இன்றுபி. சுசீலா02:41
6அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குதுடி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா03:44
7கள்ளிருக்கும்பி. பி. ஸ்ரீநிவாஸ்04:22
8ஆசைக் காதலைபி. சுசீலா04:34

சான்றாதாரங்கள்

  1. "Marutha Nattu Veeran". spicyonion.com. மூல முகவரியிலிருந்து 2 September 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-10-31.
  2. "Marutha Nattu Veeran". nadigarthilagam.com. மூல முகவரியிலிருந்து 26 January 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-10-31.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.