மருட்பா
மருட்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. மருள் என்னும் சொல்லுக்கு மயக்கம் அல்லது கலத்தல் என்று பொருள். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமைவது மருட்பா எனப்படும். மருட்பா வகைகள்
- சமநிலை மருட்பா - வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமநிலையில் கலந்திருப்பது
- வியனிலை மருட்பா - வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பது.
- வியனிலை மருட்பா எடுத்துக்காட்டு
பருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி
விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த
வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்
குலமுனி புதல்வனுக் கீந்த
அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.