மரனவு மக்கள்

மரனவு மக்கள் (Maranao People), பிலிப்பீன்சில் வாழும் இசுலாமிய மக்கள் ஆவர். இவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொருட்களை உருவாக்குவதில் வல்லுனர்கள். மரனவு என்ற சொல்லுக்கு ஏரியில் வாழும் மக்கள் என்று பொருள். பிலிப்பைன்சின் ஆறாவது பெரிய இனக்குழுவான இவர்கள் லனவு என்ற ஏரிக்கருகில் வாழ்கிறார்கள்.

பண்பாடும் பழக்கவழக்கங்களும்

மொழி

மரனவு மொழி ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழியை பிலிப்பைன்சின் மாகாணங்களில் வாழும் மரனவு மக்கள் பேசுகின்றனர். பெரும்பான்மையினர் ஆங்கிலம், தகலாகு மொழிகளையும் பேசுகின்றனர்.

கலை

சரிமனோக் பறவையுடன் காணப்படும் நாட்டுப்புறக் கலை வேலைப்பாடு

நன்னம்பிக்கைப் பறவையான சரிமனோக் இவர்களின் கலை வேலைப்பாடுகளில் காணப்படும். வண்ணமயமான சிறகுகளுடனும் நீண்ட வால் கொண்டும், மீனைத் தன் அலகால் கொத்தியபடி நிற்குமாறு வரைந்திருப்பர்.

இசை

பியுலா என்னும் இசைக் கருவியினை வாசிப்பர். இவர்களின் இசையை யுனெசுக்கோ மனிதகுலத்தின் சிறந்த இசைகளில் ஒன்று எனப் போற்றியுள்ளது.

உணவு

இவர்களின் உணவுகளில் காரம் அதிகமாக இருக்கும். எண்ணெயும் மிளகாயும் கலந்த உணவு வகைகளை அதிகம் விரும்பி உண்பர். உணவைப் பற்றிய இசுலாமியக் கதை மிகவும் பிரசித்தி பெற்றது. இவர்கள் வாழ்வில் உணவு முக்கியப் பங்காற்றுகிறது.[1]

மக்கள்

மரனவு மக்களின் எண்ணிக்கை 1,142,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் அரேபிய, இந்திய, மலாய், ஜாவனிய மக்களின் கலப்பினத்தவர் ஆவர். ஏறத்தாழ அனைவரும் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர். எசுப்பானியர்களின் ஆட்சிக்காலத்திற்கு முன் இவர்கள் தாங்களே இப்பகுதிகளை ஆண்டனர்.

மேற்கோள்கள்

  1. Madale, Nagasura T. (2010-02-06). "Recipe in the Life of the Maranao By: Nagasura T. Madale, PhD. -Part 1". Kalopindo. Aratawata Website. மூல முகவரியிலிருந்து July 14, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 21, 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.