மன்னித்தல்
குழந்தையும் தெய்வமும்குணத்தால் ஒன்று. குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று என்ற பாடல் மன்னிக்கும் மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது. மன்னிக்கும் பண்பு தெய்வீகப் பண்பு என்பர். இதையே வள்ளுவர்,இன்னா செய்தாரை மறக்காது ஆனால், அவர் செய்த தீமையை மறந்து நன்னயம் செய்தல் வேண்டும் என்கிறார்.
குழந்தை மற்ற குழந்தையுடன் சண்டை பிடிக்கிறது. ஆனல் சிறிது நேர்த்தில் மன்னித்து மறந்து விளையாடுகிறது. ஆனல் பெரிதாக வளர்ந்ததும் அக்குழந்தைக்கு மறக்க மன்னிக்க கடினமாக இருக்கிறது. தவறு செய்தவனை மன்னிக்கும் போது அவன் திருந்த ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறு இல்லாமல் அவனைத் தண்டிக்கும் போது நம் மனத்தூய்மை கெடுகிறது.விரைவில் உடல் நலமும் கெடும்.
பலர் ஒன்று கூடி வாழும்பொழுது பிர்ச்சினைகள் உருவாகத்தான் செய்யும். அந்த நேரத்தில் நாம் மன்னிக்காது. போனால் நம் வாழ்க்கையே கசப்பாகி விடும்.மன்னிப்பின் அவசியத்தை புரிந்து கொண்டால் மனிதன் உய்யவதற்கான உயர் நோக்கம் நம் கண் தங்கும்.[1][[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
- புத்தகம்: அன்றாட வாழ்வில் தத்துவங்கள். ஆசிரியர்: எஸ். ஜே.யோகராஜா தகவல் அளித்தவர்: வள்ளலார் மன்றச் சொற்பொழிவாற்றியவர் நாள்:1.1.2012