மன்னார் மனிதப் புதைகுழி

மன்னார் மனிதப் புதைகுழி (Mannar mass grave) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில், மாந்தை சந்தியில் இருந்து 75 மீட்டர்கள் தொலைவில் திருக்கேதீச்சரம் செல்லும் வழியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனிதப் புதைகுழி ஆகும்.[1][2] [3] [4] [5] 2014 பெப்ரவரி 24 வரை மொத்தம் 80 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி 1990 ஆம் ஆண்டு முதல் ஈழப்போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு வரை இலங்கைப் படைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.[2]

பாடல்பெற்ற தலமாகிய திருக்கேதீச்சரம் கோவில் சூழலில் 2013 டிசம்பர் 20 ஆம் நாள் குடிநீர்த் திட்டத்திற்காக நீர்க்குழாய்கள் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் நிலத்தைத் தோண்டிய போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தைப் பார்வையிட்ட மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரத்தினத்தின் உத்தரவுக்கமைய அந்த இடத்தைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.[6] பத்து மண்டையோடுகளும் மனித எலும்புக்கூட்டு எச்சங்களும் முதல் நாளன்று கண்டுபிடிக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவுக்கமைய அவைகள் வேதிப் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. புதைகுழி தோண்டும் பணியைப் பார்வையிட்ட வட மாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன் எலும்புக்கூடுகளில் சித்திரவதை செய்யப்பட்ட தடயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.[1] மன்னார் நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் இப்படுகுழி தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

2014 சனவரி 3, 4 ஆம் நாட்களிலும், 2014 சனவரி 6, 7 ஆம் நாட்களிலும், 2014 சனவரி 16, 17 ஆம் நாட்களிலும் புதைகுழி தோண்டும் பணிகள் மன்னார் நீதிபவான் ஆனந்தி கனகரட்ணம், சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்திய்ரட்ண் மற்றும் காவல்துறையினர் போன்றவர்களின் முன்னிலையில் நடைபெற்றன.

30.01.2013 ஆம் திகதி வரையில் இங்கு மொத்தமாக 55 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

10.02.2014 ஆந் திகதியன்று மன்னர் நீதவான் ஆனந்தி கனகரத்தினத்தின் முன்னிலையில் மீண்டும் 20ஆவது தடவையாக புதைகுழி தோண்டப்பட்டபோது மேலும் மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் மொத்தமாக 58 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் இறுதியில் இது ஒரு சாதாரண மயானம் எனக்கூறப்பட்டது.[7]

மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.[8][9]

மேற்கோள்கள்

  1. "More skeletons to be exhumed from mass grave in Mannaar". Tamil Net. 24 December 2013. http://tamilnet.com/art.html?catid=13&artid=36918. பார்த்த நாள்: 18 January 2014.
  2. "Colombo sabotages DNA testing on skeletal remains from mass graves". Tamil Net. 22 December 2013. http://tamilnet.com/art.html?catid=13&artid=36910. பார்த்த நாள்: 18 January 2014.
  3. Balchandran, P K. "11 Skeletons Found in Mannar Mass Grave". newindianexpress.com. பார்த்த நாள் 7 February 2014.
  4. "Bishop Joseph calls for international investigation into Mannar mass grave". tamilguardian.com. பார்த்த நாள் 7 February 2014.
  5. "Four skeletal remains found in Mannar massgrave". sundaytimes.lk. பார்த்த நாள் 7 February 2014.
  6. "திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி பற்றி சர்வதேச விசாரணை தேவை: ராயப்பு ஜோசப்". பிபிசி தமிழோசை. 25 டிசம்பர் 2013. http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131225_royappujoseph.shtml. பார்த்த நாள்: 18 சனவரி 2014.
  7. "Mannar mass grave an ordinary cemetery: DG". The Daily Mirror (Sri Lanka). பார்த்த நாள் 8 April 2014.
  8. மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் புதிய ஆதாரம்
  9. மன்னார் மனிதப் புதைகுழியை அண்மித்த கிணறு இயந்திரங்களின்றி சுத்திகரிப்பு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.