மந்தை புத்தி

மந்தைப் புத்தி (swarm intelligence) என்பது இயற்கை மற்றும் செயற்கையில் காணப்படும் ஒருங்கிணைந்த, மையம் விலக்கப்பட்ட ஒரு கூட்டு நடத்தை முறை ஆகும்.

இந்த நடத்தை முறையில் ஒவ்வொருவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டுப்படுத்தும் மையம் இல்லாவிடிலும் இது வெற்றிகரமாய்ச் செயல்படுகிறது.

எறும்புச் சாரை, பறவைக் கூட்டம், விலங்கு மந்தைகள், மீன் கூட்டம் ஆகியவை இயற்கையில் காணப்படும் மந்தைப் புத்திக்கான உதாரணங்கள் ஆகும்.

பொறியியல் அறிவோ, படை நடத்தும் தளபதி அறிவோ, கட்டுமான அறிவோ ஒரு தனி எறும்புக்கு நிச்சயமாக இல்லை.. ஆனால் எறும்புக் கூட்டத்திற்கு உண்டு!

"தனி ஒரு எறும்பு ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் 'திரு திரு' என்று விழிக்கும் தனி எறும்பின் 'சாமர்த்தியம்' எத்தனை பரிதாபமானது என்பதை தனியாக நிறுத்திப்பார்த்தால் தெரியும் என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்து பெண் அறிஞர் டெபொரா கோர்டான் சொல்லுகிறார்.

"எறும்புக்கு விவரம் பத்தாது ஆனால் எறும்புக் கூட்டத்தின் அறிவுக்கு ஈடு இணை இல்லை" 140 மில்லியன் ஆண்டுகளாகப் போராடி 12,000 வகை எறும்பு சிற்றினங்கள் வளர்த்துக் கொண்ட அறிவு தான் "மந்தை புத்தி". மந்த புத்தியல்ல. தனி ஒரு எறும்பினால் நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒரு மாபெரும் சாதனையை ஒரு எறும்புக் கூட்டம் எளிதில் சாதித்துவிடும். தீனி இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதுடன் அதற்கான மிக சீக்கிரமான குறுக்கு வழியைக் கண்டு பிடிப்பதிலும், கூட்டத்தைப் பிரித்து வேலையைப் பங்கிட்டுக் கொள்ளும் நிர்வாகத் திறமையிலும் பக்கத்து புற்றிலிருக்கும் கூட்டத்துடன் வேட்டைப் பகுதியை பகிர்ந்து கொள்ளும் ராஜ தந்திரத்திலும், தனி ஒரு எறும்பு 'மண்டு' ஆனால் கூட்டமாக செயல்படும்போது அதன் வேகம், விவேகம் இரண்டுமே அசாத்தியம். இதை கோர்டான் அவர்கள் 'ஸ்வார்ம் இன்டேல்லிஜென்ஸ்' (Swarm Intelligence) மந்தை புத்தி என்றழைக்கிறார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.