மந்தநிலை
பொருளாதாரத்தில் மந்தநிலை என்பது பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ந்து சில காலம் நிகழும், பொதுவானதொரு வேகக்குறைவு.அல்லது வர்த்தகச் சுழற்சியில் தாழ்வுநிலை என்று வரையறுக்கப்படுகிறது.[1][2] [2][4] மந்தநிலையின் போது பல பொருளாதார குறியீடுகளும் அதே முறையில் மாறுகின்றன உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு, முதலீட்டு செலவினம், கொள்ளளவு உபயோகம், வீட்டு வருமானம், வியாபார லாபம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்வதாகும். இவை அனைத்தும் மந்தநிலையின் பொழுது பெருமளவில் வீழ்ச்சி அடைகின்றன.
நாட்டு மக்கள் பரவலாக செய்வதறியாமல் தங்கள் செலவுகளை குறைக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து செயல் படும் பொழுது மந்த நிலை ஏற்பட்டதாக கொள்ளப்படுகிறது. இதில் இருந்து விடுபடுவதற்கு, பொதுவாக அரசுகள் பேரினப் பொருளியல் திட்டங்களை வகுக்கின்றனர், அவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது, அரசின் செலவீனங்களை அதிகரிப்பது, வரிகளை குறைப்பது போன்றவை அதில் அடங்கும்.
அடையாளம் காணுதல்
பொருளியல் |
![]() |
பகுதிவாரியாக பொருளாதாரம் |
பொது பகுப்புகள் |
---|
பொருளாதார எண்ணங்களின் வரலாறு Methodology · Mainstream & heterodox |
தொழில்நுட்ப வழிமுறைகள் |
ஆட்டக் கோட்பாடு · Optimization Computational · Econometrics Experimental · National accounting |
|துறைகளும் துணைத் துறைகளும் |
நடத்தை · பண்பாடு · படிவளர்ச்சிக் கொள்கை |
பட்டியல்கள் |
பத்திரிகைகள் · பதிப்புகள் |
வணிகமும் பொருளியலும் வலைவாசல் |
1975 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் பொருளாதார புள்ளிவிவரவியல் நிபுணர் சுலயுஸ் ஷிச்கின் மந்த நிலையை அடையாளம் காண்பதற்கான பல எளிதான விதிமுறைகளை முன்வைத்தார். அதில் ஒன்று தான் ஜிடிபி இரண்டு காலாண்டுகளுக்கு மேல் குறைவது[3][7] காலப்போக்கில் மற்ற விதிகள் நினைவில் நிற்காமல் போனாலும் இந்த விதி முறை மட்டும் மனதில் நிலைத்தது.[4][9] தற்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரு காலாண்டுகளுக்கு மேலான கால அளவுக்கு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்தால் மந்தநிலை என்று வரையறுகிறது [5][11][6][13] சில பொருளாதார நிபுணர்கள் பன்னிரண்டு மாதத்திற்குள் வேலைவாய்பின்மை ஒன்றரை சதவிகிதம் அதிகரிப்பதையே மந்தநிலை என குறிப்பிட விரும்புகிறார்கள்.[7]
அமெரிக்காவில் மந்தநிலையை கணக்கிடும் அதிகாரம் தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தின் வர்த்தக சுழற்சி கணக்கீட்டுக் குழுவிடம் உள்ளது. மந்தநிலை என்பதை நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பாக ஜிடிபி வளர்ச்சி, உண்மையானதனிநபர் வருமானம், வேலைவாய்ப்பு (உழவு சாரா) தொழில் உற்பத்தி, மொத்த சில்லரை வியாபாரத்தில் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சி சில மாதங்களுக்கு மேல் நீடித்தல் என்று என்.பி.ஈ.ஆர். வரையறுக்கிறது[8][௧௬] கல்வியாளர்கள்ள, பொருளாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தகர்கள் என்று கிட்டத்தட்ட அனைவரும் மந்தநிலையின் சரியான தொடக்க மற்றும் முடிவு தேதிகளைக் கணித்து என்.பி.ஈ.ஆர். ஐ வழங்கிய முடிவுகளில் இருந்து வேறுபடுகின்றனர்.
குணங்கள்
விரிவாக்கம் தேவைப்படுகின்ற அனைத்து கட்டுரைகள்}}
மந்தநிலை ஒரே நேரத்தில் நிகழக்கூடிய பல பண்புகளை உள்ளடக்கியது. அவற்றுள் வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் நிறுவன லாபங்கள் ஆகியவற்றுள் ஏற்படும் குறைவுகளும் அடங்கும்.
மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் மந்த நிலை நீடித்தால், அது நீண்ட மற்றும் கடுமையான மந்தநிலை அல்லது பொருளாதார தாழ்வுநிலை எனப்படுகிறது, எனினும் சிலர் பொருளாதார தாழ்வுநிலைக்கான காரணங்களும், மந்தநிலைக்கான காரணங்களும் வெவ்வேறாகும் என வாதாடுபவர்களும் உண்டு..[7]
மந்தநிலையின் அறிகுறிகள்
முற்றிலும் நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை எனினும், கீழ் காணும் சிலவற்றை சாத்தியக்கூறுகளாய் எடுத்துக்கொள்ளலாம்.[9]
- அமெரிக்காவில், மந்தநிலைக்கு முன்னதாக வழக்கமாக பங்கு சந்தை வீழ்ச்சி அடையும். ஆயினும் 1946 ஆம் ஆண்டுக்குப் பின் நிகழ்ந்த பத்து சதவிகத்திற்கும் மேலான வீழ்ச்சிகளைத் தொடர்ந்து மந்தநிலை எதுவும் நிகழவில்லை[10][21] 50 சதவிகிதத்திற்கும் மேலான சமயங்களில் மந்தநிலை தொடங்கிய பிறகே குறிப்பிடத்தகுந்த பங்குச் சந்தை வீழ்ச்சி உண்டாயிற்று.
- தலைகீழ் உற்பத்தி வளைவு,[11][22]ஜோனாதன் எச் ரைட் உருவாக்கிய இந்த மாதிரி, 10 ஆண்டு உற்பத்தி மற்றும் மூன்று மாத கஜானா கடன் பத்திரங்கள் மற்றும் தேசிய நிதி கையிருப்பு விகிதம் ஆகியவற்றால் கணக்கிடுகிறது [12][23] தேசிய ரிசர்வ் வங்கி உருவாக்கிய மற்றொரு மாதிரியில் 10மாத காலத்தைக் கொண்டு கணக்கிடுகிறது. இவை ஒன்றும் நிச்சயமான அளவீடு இல்லை,[13][24] சில சமயம் 6 முதல் 18 மாதங்களுக்கு பின் மந்தநிலை ஏற்படுகிறது [25].
- மூன்று மாத காலத்தில் வேலைவாய்ப்பின்மையில் ஏற்படும் மாற்றம்.[14]
- முன்னணி பொருளாதாரக் குறியிடுகளின் அட்டவணை (மேல் உள்ளவற்றில் சிலவற்றை உள்ளடக்கியது).[15]
அரசு பதில் நடவடிக்கைகள்
விரிவாக்கம் தேவைப்படுகின்ற அனைத்து கட்டுரைகள்}}
பெரும்பாலான முன்னணி பொருளாதார நிபுணர்கள் மொத்த தேவையில் ஏற்படும் குறைபாடுகளே மந்தநிலையை உருவாக்குவதாக கருதுகிறார்கள். அவர்கள் விரிவாக்கக் கொள்கைகளை மந்தநிலையின் போது ஆதிரிக்கிறார்கள்.
பொருளதாரத்தை மீட்பதற்கான திட்டங்கள் கொள்கை வகுப்பவர்களை பொறுத்து வேறுபடும் பணவாதிகள் விரிவாக்க திட்டங்களை ஆதரிக்கும் போது, கீனேஸியன் கொள்கையாளர்கள் அரசு செலவினங்களை அதிகரிப்பதை விரும்புகிறார்கள்.
உற்பத்தித்துறையைச் சார்ந்தவர்கள்,வர்த்தக முதலீட்டை அதிகரிக்க வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று பரிந்துறைக்கிறார்கள்.லைசே-ஃபேரே வேறு சிலர் (லைசே-ஃபேரே),அரசு எந்த குறுக்கீடும் செய்யாமலிருப்பதே நலம் என்று நினைக்கிறார்கள்.
பங்கு சந்தைகளும், மந்தநிலையும்.
பங்குச் சந்தையில் சரிவு ஏற்படும் பொழுதெல்லாம் மந்த நிலை தொடரலாம் என்ற அச்சம் காலம் காலமாக இருந்து வருகிறது. நீண்ட காலங்களுக்கு உட்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சிகளில், 1948 ஆம் ஆண்டிலிருந்து இது வரை பத்து தடவை பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டதாகவும், 0 முதல் 13 மாதங்கள் கரு வளர் காலமாகக் கொண்டு மந்த நிலை நிகழ்வுகள் தொடர்ந்த தாகவும், சராசரியான கரு வளர் காலம் 5.7 மாதங்களாக இருந்ததாகவும் சேகல் எனும் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். ஆயினும், 10% விழுக்காட்டுக்கும் மேலாக பங்குகள் வீழ்ச்சி அடைந்த 10 நிகழ்வுகளுக்குப் பிறகு, மந்த நிலை தொடரவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.[16][31].
அதே போல, ஒரு மந்த நிலை ஏற்படுவதற்கு சற்று முன் நில உட்மைக்கான சந்தையிலும் சரிவு ஏற்படுகிறது.[17][33] ஆனாலும், மந்தநிலையை விட பல நாட்கள் ரியல் எஸ்டேட் வீழ்ச்சிகள் நீடிக்கின்றன.[18]
வர்த்தக சுழற்சிக்கான கால அளவுகளை மதிப்பிட இயலாததால், முன்னறிவது மிகக் கடினமாகும், அதனால் பங்கு சந்தையில் மிகவும் சாதகமான சூழ்நிலையை கண்டறிந்து சந்தையில் நுழைவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத செயலாகும் என்று சீகல் தெரிவிக்கிறார்.தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் கூட உயர்நிலை, அல்லது தாழ்வுநிலையை கண்டறிய பல மாதங்களை எடுத்துக் கொள்கிறது.[19][36]
பொருளாதார வீழ்ச்சியின் போது, அதிக லாபம் ஈட்டக்கூடிய பங்குகளான துரித நகர்வு நுகர்வு பொருட்கள், மருந்து உற்பத்தி, புகையிலை ஆகியன நன்றாக செயல்படுகின்றன [20][37]. இருந்தாலும், பொருளாதாரம் தாழ்வுநிலையை விட்டு மீளும்போது (அட்டவணைகளில் எம்.ஏ.சி.டி. என்று சில சமயம் அடையாளம் காணப்படுகிறது.) வளர்ச்சித் துறை பங்குகள் வேகமாக வளர்ச்சி பெறுகின்றன. மருத்துவம் மற்றும் அவசியப் பொருட்கள் உற்பத்தி ஆகிய துறைகள் மீளும் விதம் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன [21][39]. பன்னாட்டு பங்குகளின் முதலீடு செய்வது பாதுகாப்பாயினும் அமெரிக்க பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய நாடுகளின் பொருளாதாரங்களும், அமெரிக்காவில் ஏற்படும் வீழ்ச்சியால் பாதிக்கப்படுகின்றன.[22]
பாதிவழிவிதி என்று முதலீட்டாளர்களிடம் ஒரு கருத்து உண்டு [23][41]. அதன்படி முதலீட்டாளர்கள் பொருளாதாரம் மந்தநிலையின் பாதிவழியில் மீளத்தொடங்குவதாக எண்ணினர். 1919 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் நடைபெற்ற 16 மந்தநிலைகளின், சராசரி காலம் 13 மாதங்கள், ஆயினும், சமீபத்தியவை சிறிய கால அளவை உடையவனாகி இருந்தன. அதன்படி, 2008 ஆம் ஆண்டில் இருந்த மந்தநிலை சராசரியைப் பின்பற்றினால், பங்குச்சந்தை வீழ்ச்சி அதன் மிக மோசமான நிலையை நவம்பரில் எட்டியிருக்கும். அமெரிக்காவில் அந்த முறை மந்த நிலை மிகவும் மோசமாக வீழ்ச்சி அடைந்தது மார்ச் மாதம் 2009 ஆம் ஆண்டிலாகும்.
மந்தநிலையும், அரசியலும்
போதுவாக ஒரு அரசு, அதன் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய நிருவாகத் திறமையைப் பொறுத்து பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களின் அடிப்படையில் புகழ்ச்சி அல்லது இகழ்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறது.[24][42] இதனால், மந்தநிலை எப்போது தொடங்கியது என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் எழுகின்றன.[25] விரிவான வளர்ச்சியின் ஒரு கால கட்டத்தில் தக்க வைக்க இயலாத ஒரு நிலமையை அடையும் பொழுது திருத்தங்களை மேற்கொள்வதால் ஒரு சிறு பின்னடைவு ஏற்படுகிறது, அது மந்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம். அதனால், பொருளாதார சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திற்குமான காரணங்களைத் தனிமைப்படுத்துவது எளிதானதல்ல.
1981 ஆம் ஆண்டின் மந்தநிலை ரொனால்டு ரீகன் பதவி ஏற்பதற்கு முன், மத்திய ரிசர்வ் அமைப்பின் தலைவர் பால் வோல்கர் என்பவரது சிக்கனக் கொள்கைகளால் ஏற்பட்டதாகக் கருதுகின்றனர். ரீகன் அந்தக் கொள்கையை ஆதரித்தார். 1960 ஆம் ஆண்டுகளில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த பொருளாதார வல்லுநர் வால்டர் ஹெல்லர் என்பவர், அந்த மந்தநிலையை ரீகன்-வொல்கர்-கார்ட்டர் மந்தநிலை என்றழைத்தார்.[26][44] ரீகன் அரசின் கீழ், மந்தநிலையை எதிர்க்க எடுத்த நடவடிக்கைகள், அபரிதமான வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
பொதுவான நம்பிக்கையின்படி [45] , மந்தநிலை அல்லது அதன் கடுமையின் மீது அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதிக்கம் உண்டு[46] மந்தநிலை தவிர்க்க முடியாதது என்றும் அது ஏற்படுவதற்கான காரணங்கள் புரிந்து கொள்ள முடியாதது என்றும் பொருளாதார வல்லுனர்கள் கற்றுத் தருகிறார்கள். அதன் காரணமாக, நவீன அரசமைப்புகள் மந்தநிலையின் கடுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றன. மந்தநிலையைத் தடுப்பதில் அவை பெரும்பாலும் தோல்வியடைகின்றன. அரசின் நடவடிக்கைகள் மந்தநிலையின் கடுமையைக் குறைத்ததா அல்லது அதிகரித்ததா என்பதை நிரூபிப்பது கடினம்.[47]
மந்தநிலைகளின் வரலாறு
உலகளாவிய மந்தநிலைகள்
உலகளாவிய மந்தநிலை என்பதை பொதுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கங்கள் இல்லை. உலகளாவிய வளர்ச்சி விகிதம் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள கால அளவுகளை மந்தநிலைகளாக அனைத்துலக நாணய நிதியம் கருதுகிறது.[27][48] எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மந்தநிலை ஏற்படுவதாக அனைத்துலக நாணய நிதியம் மதிப்பிடுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் நிகழ்ந்த மூன்று மந்தநிலைகளாக அனைத்துலக நாணய நிதியம் கணக்கிடும் காலங்களில் உலகளாவிய தனிநபர் உற்பத்தி வளர்ச்சி விகிதம் பூஜ்யம் அல்லது எதிர்மறையாக இருந்த்து.[28]
அனைத்துலக நாணய நிதியத்தில் (ஐ.எம்.எப்) உள்ள பொருளாதார வல்லுநர்கள் மந்திநிலை என்பது உலகளாவிய வளர்ச்சி விகிதம் 3 சதவிகிதத்திற்கு கீழ் குறைவது என்று கருதுகிறார்கள். அதன்படி 1985 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை நான்கு கால அளவுகள் (அதாவது, 1990-1993, 1998, 2001-2002, 2008-2009) மந்தநிலை என்று குறிப்பிடத் தகுதியுடையன.
இங்கிலாந்தில் ஏற்பட்ட மந்தநிலைகள்
அண்மையில் ஐக்கியப் பேரரசு நாடுகளை பாதித்த மந்தநிலை 2000 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவையாகும்.
அமெரிக்காவில் ஏற்பட்ட மந்தநிலைகள்
பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி, 1854 ஆம் ஆண்டில் இருந்து, அமெரிக்கா வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி சுழற்சியை 32 முறை கண்டுள்ளது. இவற்றில் சராசரியாக 17 மாதங்கள் வீழ்ச்சியும், 38 மாதங்கள் வளர்ச்சியும் கண்டுள்ளன.[8][52] ஆயினும், 1980 ஆம் ஆண்டில் இருந்து ஒரு காலாண்டுக்கு மேலாக வளர்ச்சி விகிதம் குறைவது எட்டு முறைகளுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ளன,[29][53]. அவற்றுள் நான்கு மந்தநிலை என்று கருதப்படுகின்றன.
சீனாவில் ஏற்பட்ட மந்த நிலை
2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஓர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சீனாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்காது என்று கூறினார். ஆனால் [[இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் சீனாவில் கூட்டம் ஒன்றில் பேசியபோது, இந்திய நிறுவனக்கள் சீனாவிற்கு பொருட்களை சேற்றுமதி செய்வதைவிட உலக நாடுகள் இந்தியாவிடம் கச்சா பொருட்களை வாங்கி சீனாவிற்கு ஏற்றுமதி செய்கின்றன. அதனால் சீனாவின் பொருளாதர மந்த நிலை இந்தியாவைப்பாதிக்கும் என்று தெரிவித்தார். [30]
- ஜுலை 1981-நவம்பர் 1982; 14மாதங்கள்.
- ஜுலை 1990-மார்ச் 1991; 8மாதங்கள்
- மார்ச் 2001-நவம்பர் 2001: 8மாதங்கள்
- டிசம்பர் 2007-இன்றுவரை [31][54]
கடந்த மூன்று மந்தநிலைகளின் போதும், என்.பி.இ.ஆர் முடிவு. தொடர்ந்து இரு காலாண்டுகள் வீழ்ச்சி கண்டால் அது மந்தநிலை என்ற வரையறையுடன் ஒத்துப் போனது. 2001 ஆம் ஆண்டுகளின் மந்தநிலை இந்த வகையில் படவில்லை என்றாலும் ,முன்னதாக இரு காலாண்டுகள் வீழ்ச்சியும், குறைவான வளர்ச்சியும் மாறிமாறி நிகழ்ந்தன[29]
சில நாடுகளில் தற்போதைய மந்தநிலை
2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான நாடுகள் மந்தநிலையை அனுபவிப்பதாக அதிகாரப்பூர்வ பொருளாதார விவரங்கள் தெரிவிக்கின்றன.2007ஆம் ஆண்டின் இறுதியில்அமெரிக்கா மந்தநிலையை அடைந்தது [32][58]. அதை தொடர்ந்து, 2008ஆம் ஆண்டில் பல நாடுகளுக்கும் அதே நிலை ஏற்பட்டது.
அமெரிக்கா
அமெரிக்க வீட்டு சந்தை திருத்தம், (அமெரிக்க வீட்டு சந்தை குமிழியின் மற்றும் சப் பிரைம் கடன் நெருக்கடியின்ஒரு விளைவு) மந்தநிலை உருவானதற்கு ஒரு முக்கியமான காரணம்
2008/2009 ஆம் ஆண்டுகளின் மந்தநிலையின் போது 20 ஆண்டுகளில் முதன்முறையாக தனிநபர் நுகர்வு வீழ்ச்சி அடைந்தது. இது தற்போதைய மந்தநிலையின் ஆழத்தையும், கடுமையையும் உணர்த்துகிறது. நுகர்வோரது நம்பிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், பொருளாதாரத்தை மீட்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். நுகர்வோர்கள் இந்த மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளின் மதிப்பு குறைந்தும் ஓய்வூதிய சேமிப்புகளின் மதிப்பு பங்கு சந்தையால் வீழ்ச்சி அடைந்ததும் அவர்களை துன்புறுத்துகின்றன. நுகர்வோர்கள் தங்கள் சொத்துக்கள் அழிந்து வருவதை காண்பதுடன், வேலைவாய்பின்மை பெருகி வருவதால் தங்களுக்கு வேலையிழப்பு நேரிடுமோ என்றும் அச்சப்படுகிறார்கள். நுகர்வோர்கள், அவர்களின் வளம் குறைவதை மட்டும் காணாமல்-வேலைவாய்ப்பின்மை அதிகரித்தலைக் கண்டு தங்களின் வேலை பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.[33]
அமெரிக்க முதலாளிகள் 63,000 வேலைகளை பிப்ரவரி 2008 ஆம் ஆண்டில்[34][60]குறைத்தனர். இது ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாகும். "மத்திய ரிசர்வ் அமைப்பின் முன்னால் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் என்பவர் ஏப்ரல் 6, 2008 அன்று "அமெரிக்கா மந்தநிலைக்கு செல்ல 50 சதவிகித வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.[35][61]. அக்டோபர் 1ஆம் தேதி, பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் மேலும் 1,56,000 வேலையிழப்புகள் செப்டம்பரில் ஏற்பட்டதாக தெரிவித்தது. ஏப்ரல் 29, 2008 ஆம் ஆண்டில் 9 அமெரிக்க மாகாணங்கள் மந்தநிலையில் இருப்பதாக மூடி அறிவித்தார். நவம்பர் 2008 ஆம் ஆண்டில் தொழில் உரிமையாளர்கள் 5,33,000 வேலைகளைக் குறைத்தார்கள். 34 வருடங்களில் மிகப்பெரிய வேலையிழப்பு ஏற்பட்ட மாதமாக அது விளங்கியது.[36][62]. 2008 ஆம் ஆண்டில் மொத்தம் இருபத்தி ஐந்து இலட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டன.`[37]
மார்ச் 2009 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.5 சதவீதமாக அதிகரித்தது http://www.wealthalchemist.com/Blog/2009/04/reality-check-job-loss-2009-control/. டீசம்பர் 2007 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 2009 வரை 51 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டன. அதாவது, முந்தைய ஆண்டை விட 50 லட்சம் அதிகம் பேர் வேலையின்றி தவித்தனர்.http://www.bls.gov/news.release/empsit.nr0.htm. 1940 ஆம் ஆண்டுகளில் இருந்து மிகவும் அதிகமானவர்கள் வேலையின்றி இருந்தது இந்த முறை தான்http://money.cnn.com/2009/01/09/news/economy/jobs_december/index.htm.
முதல் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் 1 சதவிகிதம் உயர்ந்தாலும்,[38][64] [39][65] நீடித்த கடன் நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களான எண்ணெய், உணவு, இரும்பு ஆகியவற்றின் விலையேற்றத்தால் ஏற்பட்ட கடுமையான பணவீக்கம் ஆகிய காரணங்களால் ஜூன் மாத அளவில் மந்தநிலை ஏற்பட்டது.[40][66] 2008 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஜி.டி.பி யில் 0.5 [41][67] சதவிகித குறைவு ஏற்பட்டது. இது 2001 ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்டதில் மிகவும் அதிகமான குறைவாகும் .உணவு, உடை போன்ற பொருட்களுக்கு செலவிடும் தொகை 1950ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமான வீழ்ச்சியாக 6.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது.[42]
மத்திய ரிசர்வ் வங்கி, பிலடெல்பியா கிளையில் இருந்து நவம்பர் 17, 2008 அன்று வெளியிட்ட அறிக்கையில், 51 முன்னறிவிப்பாளர்களின் கணிப்புப்படி மந்தநிலை ஏப்ரல் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 14 மாதங்கள் [43][69] நிலைக்கும் என்று அறிவித்தது. அவர்கள் ஐடிபி கடைசி காலாண்டில் 2.9சதவிகிதமும் குறையும் என்று கணக்கிடுகின்றனர். இந்த முன்னறிவிப்புகள் முந்தையவற்றை விட குறைவான திருத்தங்களை கொண்டுள்ளன.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று வெளிவந்த தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி அமெரிக்காவில் டிசம்பர் 2007 முதல் மந்தநிலை நிலவி வருகிறது. (பொருளாதார நடவடிக்கைகளில் உச்சநிலை). இப்படியாக வேலையிழப்பு, தனிநபர் வருமானக்குறைவு, ஐடிபி குறைவு போன்ற பல அளவுகளை அளந்தார்கள்.[44][70௦]
பிற நாடுகள்
மற்ற சில நாடுகளும் ஐடிபி வளர்ச்சி விகிதத்தில் குறைவு கண்டுள்ளது. பணப்புழக்கத்தில் குறைவு, உணவு, எரிசக்தி துறைகளில் பணவீக்கம் அதிகரிப்பு, சரிவு ஆகிய காரணங்களால் இது நிகழ்ந்தது. இவற்றில் இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா, ஜப்பான், சீனா, இந்தியா, நியூசிலாந்து மற்றும் பல ஈஇஎ நாடுகளும் அடங்கும். சில நாடுகளில் மந்த நிலையை வல்லுனர்கள் உறுதி செய்தனர். மற்ற சில தமது நான்காம் காலாண்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன. இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தாலும் மந்தநிலை ஏற்படவில்லை. ஆப்பிரிக்காவும், தென்னாப்பிரிக்காவும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றது. ஆஸ்திரேலியா 2009 ஆம் ஆண்டில் மந்தநிலையை தவிர்த்து, உலகளாவிய சரிவுக்கு நேர்மாறாக வளர்ச்சியடைந்தது.
கூடுதல் பார்வைக்கு
- பொருளாதார சரிவு
- பொருளாதார தேக்கநிலை
- பெரும் அமிழ்வு- ஆகஸ்டு, 1929-செப்டம்பர்,1939. மிகப் பெரியதும்,ஆழமானதுமான மந்தநிலை
- அமெரிக்க மந்தநிலைகள் அட்டவணை-அமெரிக்கவில் நிகழ்ந்த முக்கியமான மந்தநிலைகளின் அட்டவணை
- 2000 ஆண்டிற்கு பிந்தைய பின்னடைவு
- தேக்கமுற்ற வீக்கம்
மந்தநிலைக்கான காரணங்கள்
- நெருக்கடி கோட்பாடு
- லாபவிகிதம் குறையும் சுபாவம்
- செலாவணி நெருக்கடி
- எரிபொருள் நெருக்கடி
- போர்
- குறைவான நுகர்வு
- அதிக உற்பத்தி
- பொருளாதார நெருக்கடி
விளைவுகள்
- திவால்
- கடன் நெருக்கடி
- பணப்பெருக்கம்பணவீக்கத்தில் குறைவு
- முன்முடிப்பு
- வேலைவாய்ப்பின்மை
குறிப்புகள்
- "Recession". Merriam-Webster Online Dictionary. பார்த்த நாள் 19 November 2008.
- "Recession definition". Encarta® World English Dictionary [North American Edition]. Microsoft Corporation (2007). பார்த்த நாள் 19 November 2008.
- Shiskin, Julius (1974-12-01), "The Changing Business Cycle", த நியூயார்க் டைம்ஸ், p. 222
- {{url = http://money.cnn.com/2008/05/05/news/economy/recession/index.htm|title =The risk of redefining recession|first1 =Lakshman|last1 =Achuthan|first2 =Anirvan|last2 =Banerji|publisher =CNN|date =2008-05-07}}
- "Financial Check Glossary". Bloomberg.com (2000). பார்த்த நாள் 19 November 2008.
- "Recession definition". BusinessDictionary.com (2007-2008). பார்த்த நாள் 19 November 2008.
- 18 http://clubtroppo.com.au/2008/11/23/ மந்தநிலைக்கும் அமிழ்வுக்கும் இடையில் உல்ல வித்தியாசம்?சால் எஸ்லேக், நவ் 2008
- "Business Cycle Expansions and Contractions". National Bureau of Economic Research. பார்த்த நாள் 19 November 2008.
- A Estrella, FS Mishkin. "Predicting U.S. Recessions: Financial Variables as Leading Indicators". MIT Press.
- ஜெரமி ஸீகல்நீண்ட கால பங்குகள்
- தலைகீழ் வளைவில் பங்குகளை தரம்பிரிப்பது மைக்கேல் ஹட்ஸ்ன்
- 23 ஜொனாதன் ரைட். எச்,உற்பத்தி வளைவும், மந்தநிலை முன்னறிதலும் FEDs Working Paper No. 2006-7. பெட்ட்ஸ் வொர்கிங் பேப்பர் நோ 2006-7
- 24 தகவலா,சத்தமாமந்தநிலை முன்னறிவிப்பில் "பிரிமியம் "என்ற சொல்லின் சம்பந்தம்.
- 26 உழைப்பு மாதிரி மந்தநிலை சாத்தியக்கூறுகள் குறைவு என்று முன்னறிவிக்கிறது
- 27 முன்னணி பொருளாதாரக் குறியிடுகளின் அட்டவணைகள் ஜனவரி 1,2008 இல் அமெரிக்கா மந்தநிலையை அடைந்ததாக தெரிவிக்கிறது
- ௩௧ ஜெரமி ஸீகல்(2002). நீண்ட கால பங்குகள் ,பங்கு சந்தை வருமானம் மற்றும் நீண்ட கால முதலீட்டு தந்திரங்கள்.3,நியுயார்க்:மெக்ரா ஹில்,388இச்ப்ன் 9780071370486
- "From the subprime to the terrigenous: Recession begins at home". Land Values Research Group (June 2, 2009). "A downturn in the property market, especially in turnover (sales) of properties, is a leading indicator of recession, with a lead time of up to 9 quarters..."
- Robert J. Shiller. "Why Home Prices May Keep Falling". New York Times, June 6, 2009.
- 36 மந்தநிலை முன்னறிவிப்புகள் மற்றும் முதலீட்டு தீர்மானங்கள்., ஆலன் ஸ்லோன்,டீசம்பர் 11,2007
- 37 மந்தநிலை ? 0}பணத்தை எங்கு வைப்பது?ஷான் டுல்லி,பெப்ரவரி 6,2008
- ௩௯ மந்த்நிலையால் பாதிக்கப்படாத்த பங்குகளை மறு ஆய்வு செய்வது ஜொஸுவா லிப்டொன் (Joshua Lipton) 01.28.08
- 40 மந்தநிலையில் வாங்கக்கூடிய பங்குகள் ட்க்லஸ் கோகென் ஜனவரி 18 2008
- 41 http://online.wsj.com/article/SB122635740974515379.html NOVEMBER 11, 2008 ரெசெச்சின் புட்ஸ் ஹாலபிவே ரூல் டு தி டெஸ்ட் பய் டேவிட் கபிபின்
- 42 பொருளாதாரம் குடியரசு கட்சியை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது 29 ஜனவரி 2008
- 43 புஷ் மந்தநிலை தயாரிப்பு: ஜனநாயக உத்தியோகஸ்தர்கல் குழு,ஸெனட் பட்ஜட்,ஜூலை 31,2003
- 44 ஏமற்றத்திற்கு தயாரா? திங்கள்,நவ்,23,1981 ஜார்ஜ் ஜே. சர்ச்.
- 48 கிட்டத்தட்ட ஒரு மந்தநிலை கென்னத் ரோகோஃப் (Kenneth Rogoff),சர்வதேச நாணய நிதியம்,ஃபினாண்சியல் டைம்ஸ்,ஏப்ரல் 5 2002
- 49 அமெரிக்க ஆபத்து பரவுவதால் உலகளாவிய மந்தநிலை அபாயம்
- 53 http://www.bea.gov/national/xls/gdpchg.xls
- பொருளாதார மந்தம் இந்தியாவைப் பாதிக்கும்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கணிப்பு தி இந்து தமிழ் 23 நவம்பர் 2015
- 54 அதிகாரப்பூர்வமான தகவல்: டிசம்பர் முதல்'07
- "Determination of the December 2007 Peak in Economic Activity.". NBER Business Cycle Dating Committee (2008-12-11). பார்த்த நாள் 2009-04-26.
- 59 பொருளாதார நெருக்கடி: என்று ஓயும்ஐ.பி.ஐ.எஸ் உலகம் மந்தநிலை அறிக்கை டாக்டர். ரிச்சர்ட். ஜே. புக்ஸின்ஸ்கி, மைக்கெல் பிரைட், ஐ.பி.ஐ.ஸ் உலகம் ஜனவரி 2009'
- 60 http://www.wealthalchemist.com/Blog/2009/01/ வேலையிழப்பு முன்னறிவிப்புகள் 2009-2010
- 61 அமெரிக்க பொருளாதாரம் இரண்டு மாதங்களுள் மீண்டால் மந்தநிலை ஏற்படாது
- 62 http://www.nytimes.com/2008/12/06/business/economy/06jobs.html
- 63 http://www.statesmanjournal.com/article/20090110/NEWS/901100332
- 62 உன்மையான ஜி.டி.பி முதல் காலாண்டு 2008.ஆரம்ப மதிப்பீடு; பிரண்டு மேயர்: பொருளாதாரத்தின் போக்கு: : மத்திய ரிசர்வ் வங்கி, கிளைவ்லாண்டு
- 65 பலவீனமான பொருளாதாரம் முன்னேறுகிறது, ஆயினும் நல்ல்நிலையை அடையவில்லை: பொருளாதார செய்திகள் யாஹு
- 66{{1}ஏன் இது நீங்கள் நினைப்பதை விட மோசமாக இருக்கிறது?16 ஜூன் 2008 நியூஸ் வீக்
- 67 மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டு
- 2001ஆம் ஆண்டின் மந்தநிலையை தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரம் சுருங்கியது
- 69 http://www.philadelphiafed.org/research-and-data/real-time-center/survey-of-professional-forecasters/2008/survq408.cfm?loc=interstitialskip
- 70 http://www.usatoday.com/money/economy/2008-12-01-recession-nber-statement_N.htm என்.பி,ஈ,ஆர் அறிக்கையின் சாராம்சம்
புற இணைப்புகள்
- வர்த்தக சூழற்சி வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
- வர்த்தக சூழற்சி நிலைமைகளின் தனிப்பட்ட ஆராய்ச்சி , அமெரிக்க பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்