மந்தகதி திரி

மந்தகதி திரி என்பது, முற்கால திரியியக்க மசுகெத்துகள், மற்றும் பீரங்கிகளைப் பற்றவைக்க மசுகெத்தியர்களும் பீரங்கிவீரர்களும் உபயோகப்படுத்திய மெதுவாக எரியும் ஒரு வகை திரி ஆகும். மந்தகதி திரியானது வெடிமருந்து ஆயுதங்களுக்கு ஏற்றவை, ஏனெனில் வெடிமருந்தை எரியூட்ட பெரிய தீச்சுவாலை ஏதுமின்றி, கனந்துகொண்டிருக்கும் சிறிய நுனியே போதுமானது.[1] 

15-ஆம் நூற்றாண்டின் செர்பியப் படைகள் உபயோகித்த "ஃபீத்திலாஷா" மசுகெத்துகள். (ஃபீத்திலாஷா=திரியியக்கி)

வடிவமும் பயன்பாடும் 

திரியியக்க துப்பாக்கியின் இயக்கத்தில் இணைக்கப் பட்டிருக்கும் மந்தகதி திரியானது, வழக்கமாக ஏதேனும் நார்ச்செடி அல்லது ஆளி செடியில்[2] இருந்து பெறப்படுபவை. வேதியியல் செயல்முறையால் ஆளிச்செடியை, மெதுவாகவும், தொடர்ச்சியாகவும் நீண்ட நேரத்திற்கு எரியும்படி மாற்றப்படும்.[1] தோராயமான எரியும் வீதம், மணிக்கு 1 அடியாக (305 மிமீ) இருக்கும். திரியியக்கிகளில் இந்த மந்தகதி திரியை பயன்படுத்துகையில், திரியின் இரு முனைகளும் பற்றவைகப்படும், எதற்கென்றால் ஒரு முனை அணைந்தால், மற்றொன்று கைக்கொடுக்கும். திரி  ஈர நிலத்தில் படுவதை தவிர்க்க, திரியை மரத்தால் ஆன தீக்கோலில் வைத்து பயன்படுத்தப்படும், 

மேலும் பார்க்க 

மேற்கோள்கள் 

  1. John Keegan (1989). The Price of Admiralty. New York: Viking. பக். 277. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-670-81416-4.
  2. "Slow Match". Musketeer.ch. பார்த்த நாள் 2011-11-11.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.