மத்வேய் கூசெவ்

மத்வேய் மத்வெயேவிச் கூசெவ் (Matvey Matveyevich Gusev, உருசியம்: Матве́й Матве́евич Гу́сев, நவம்பர் 28 [யூ.நா. நவம்பர் 16] 1826 - ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1866) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் புல்கொவோ வான்காணகத்தில் 1850 முதல் 1852 வரை பணிபுரிந்தார். பின்னர் வில்னியசு வான்காணகத்தில் பணியாற்றினார்.

இவர் 1860 இல் உருசிய மொழியில் Vestnik matematicheskikh nauk (Вестник математических наук) எனும் முதல் அறிவியல் இதழைத் தொடங்கினார். இது கணிதவியல், இயற்பியல் ஆய்வுகளை வெளியிட்டது:. இவர் 1865 இல் வில்னியசு வான்காணக இயக்குநரானார்.

இவர்தான் நிலாவின் கோள வடிவமின்மையை முதன்முதலில் நிறுவினார். இவர் நில்ல புவியை நோக்கி நீண்டிருப்பதைக் கூறினார்.[1] இவர் வானியலில் ஒளிப்பட முறையைப் பயன்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் ஆவார்.இவர் வில்னியசு வான்காணகத்தில் இருக்கும்போது நிலாவையும் சூரியனையும் சூரியக் கரும்புள்ளிகளையும் ஒளிப்படம் எடுத்தார்.

இவர் 1866 இல் செருமனியில் உள்ள பெர்லினில் இறந்தார். செவ்வாயின் ஒரு மொத்தல் குழிப்பள்ளம் இவரது நினைவாக குசேவ் குழிப்பள்ளம் எனப் பெயர் இடப்பட்டுள்ளது. செவ்வாயின் தேட்ட ஊர்தியாகிய 'இசுபிரிட்' இறங்கிய இடமாகியதால் பெயர் பெற்றது'.

மேற்கோள்கள்

  1. Great Soviet Encyclopedia article on Gusev
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.