மதுரைப் படைமங்க மன்னியார்

மதுரைப் படைமங்க மன்னியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 351. (திணை - காஞ்சி; துறை - மகட்பாற்காஞ்சி)

'தெண்ணீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை' - பாடலடி

பாடல் சொல்லும் செய்தி

இந்த மகள் வாகை நகரம் போன்ற அழகு உள்ளவள். (அங்கு நடந்த போரைப் போல இவளாலும் ஒரு போர் மூளும் போல் உள்ளது.)

இவள் வாழும் ஊர் வளம் மிக்க வயல்களைக் கொண்டது. இவ்வூர் நாரை தேன்பூப் பூத்திருக்கும் மருதமரத்தில் இருப்பது சலித்துப்போய்விட்டால் அங்குள்ள காஞ்சி மரத்தில் தஞ்சம் புகுமாம். இப்படிப்பட்ட ஏமம் சான்ற ஊர் அது.

இந்த மகள் இந்த ஊர்போல வளமும், பாதுகாவலும் உடையவள். இவளது பெற்றோர் வேந்தர்க்குப் பெண் தர மறுக்கின்றனர். வேந்தரோ இவளைப் பெறாமல் விடப்போவதில்லை என்று யானை, தேர், மா, மறவர் என்னனும் நாற்படையுடன் வந்து இவளது ஊரை முற்றுகை இட்டுள்ளனர்.

இவளது நிலைமை என்ன ஆகுமோ? என்கிறார் புலவர்.

எயினன்

இந்த அரசன் வாரி வழங்கும் 'வண்கை' கொண்டவன்.

வாகை

இந்த எயினன் வாகை என்னும் ஊருக்கு அரசன். (வாகைப்பறந்தலை எனவும் சொல்லப்படும் இந்த ஊரில் நடந்த போர்நிகழ்ச்சி பற்றியும் சங்கப்பாடல் செய்தி உண்டு.)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.