மதச்சார்பற்ற ஜனதா கட்சி

மதச்சார்பற்ற ஜனதா கட்சி (Janata Party (Secular) சூலை 1979-இல் ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய ராஜ் நாராயணன் எனும் இந்திய அரசியல்வாதியால் துவக்கப்பட்டது. நிறுவன காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், 16 சூலை 1979-இல் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவரான சரண் சிங், இந்திய நடுவண் அரசின் பிரதம அமைச்சரானார். ஆனால் 20 ஆகஸ்டு 1979-இல் நிறுவன காங்கிரசு கட்சி தனது ஆதரவை சரண்சிங்கிற்கு விலக்கிக் கொண்டதால், சரண் சிங் பிரதமர் பதவியைத் துறந்தார்.

மதச்சார்பற்ற ஜனதா கட்சி
நிறுவனர்ராஜ் நாராயணன்
தொடக்கம்சூலை, 1979

சரண் சிங், மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் பெயரை, லோக் தளம் என பெயரை மாற்றினாலும், ஏழாவது 1980 இந்தியப் பொதுத் தேர்தலில்.[1] மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் பெயரால் தன் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி, மொத்த வாக்குக்களில் 9.39% வாக்குகள் பெற்று, 41 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றினார்.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.